உயிரிழந்த முதல்வர் வீட்டு நாய்: மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி செய்தி - உயிரிழந்த முதல்வர் வீட்டு நாய், மருத்துவர்கள் மீது வழக்கு
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாய் உயிரிந்தததை அடுத்து, அதற்கு சிகிச்சை அளித்த இரு கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன என தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள முதல்வர் சந்திரசேகர் ராவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் சில நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன, இதில் ஒரு நாய்க்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த நாய்க்கு தனியார் கால்நடை மருத்துவமனையைச் சேர்ந்த இரு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அந்த நாய் கடந்த 12ஆம் தேதி இறந்துவிட்டது.
இது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அந்த இரு மருத்துவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விலங்குகளை கொடுமைப்படுத்துதல், விலங்குகளை வேண்டுமென்றே கொலை செய்வது போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என விவரிக்கிறது அந்த செய்தி.

இந்து தமிழ் திசை -தயார் நிலையில் 31 ஆயிரம் காப்பாளர்கள்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள, பேரிடரால் பாதிக்கப்படக்கூடிய 4,399 இடங் களில் 30,759 முதல்நிலை காப் பாளர்கள் தயார்நிலையில் இருப் பதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார், என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வரவிருக்கும் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்துக்கான மழை பொழி வில் சுமார் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கிறது. இந்த காலகட்டத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், புயல்கள், சூறாவளி போன்றவற்றால் அதி கனமழை ஏற்படுகிறது. சரியான திட்டமிடல், முன்னேற்பாடுகள் மூலம் பொது சொத்துகள் சேதம் மற்றும் உயிர் சேதங்களை குறைக்க முடியும். அந்த வகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்க வேண்டிய முன் னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் சுற்றறிக்கைகள் அனுப் பப்பட்டுள்ளன.
மாநில அவசரகால கட்டுப் பாட்டு அறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. அதன் இலவச தொலைபேசி எண் '1070' கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் பேரிடர் தொடர்பான தகவல்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் தொடர்புடைய இதர துறைகளுக்கும் அனுப்பப் பட்டு, அவர்கள் விரைவாக நடவ டிக்கை எடுக்க ஏதுவாகிறது.
பருவமழை காலத்தில், பேரிடரால் பாதிக்கக்கூடிய 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம் 30,759 முதல்நிலை காப்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். அதில் 9,162 மகளி ரும் முதல்முறையாக இணைக் கப்பட்டுள்ளனர். மேலும் கால் நடைகளை காப்பாற்ற 8,624 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் உயிர் காக்கும் இயந்திரங்களுக்கு தேவை யான மின்வசதி மற்றும் இதர வசதிகளை தயார்நிலையில் வைத் திருக்க வேண்டும். தேவையான ஆக்சிஜன் உருளைகளையும் இருப்பில் வைத்திருக்க வேண் டும். ஏற்கெனவே உள்ள புயல் பாதுகாப்பு மையங்களைத் தவிர கல்லூரிகள், பள்ளிகள், அங்கன் வாடி மையங்கள், சமூகநலக் கூடங்கள், திருமணக் கூடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து, தேவை ஏற்படின் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஏரிகள், அணைகள் மற்றும் நீர் சேமிப்பு பகுதிகளை திறக்கும் போதோ அல்லது பெருவெள்ளத் தால் பாதிப்புக்கு உள்ளாகும் போதோ, மக்களுக்கு முன்னெச் சரிக்கை அளித்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறி வுறுத்தல்கள் மாவட்ட ஆட்சியர் கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் சூறாவளி, புயல், இடி மின்னல் தாக்கும்போது என்னென்ன முன்னெச்சரிக்கை களை மேற்கொள்வது என்பது குறித்தும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளன. பேரிடர் முன்னெச் சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள டிஎன் ஸ்மார்ட் செயலியை, ஆசிய பசிபிக் பேரிடர் அறிக்கையில், ஒரு தனித்துவம் வாய்ந்த சிறப்புமிக்க செயலி என பாராட்டப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஆண்டு தோறும் பதிவாகும் பேரிடர் மற்றும் நிவாரண விவரங்கள் அடிப்படையில், அரசு சார்பில் உரிய கொள்கை முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - மழையால் கைவிடப்பட்ட இந்தியா - தென்னாப்பிரிக்கா டி20 போட்டி

பட மூலாதாரம், Getty Images
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே தரம்சாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வேண்டிய முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது.
இதன் முதல் டி-20 போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்கான பயிற்சியில் நேற்று இந்திய வீரர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் மழை காரணமாக அவர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின் மாலை நேரத்தில் இந்திய வீரர்கள் சிறிது நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மழை அதிகமானதால் போட்டி தொடங்க முடியாமல் போனது. இறுதியாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- செளதி அரேபியா எண்ணெய் ஆலையில் தாக்குதல்: கச்சா எண்ணெய் விலை ஏற்றம்
- பிக்பாஸ்: ‘பொதுத் தேர்வால் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பார்கள்’ - குரல் கொடுத்த கமல்ஹாசன்
- 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: ’மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும்’
- சென்னை மாமல்லபுரம் மீனவ குப்பம் டூ ஆஸ்கர் - 9 வயது சிறுமியின் சாதனை கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












