You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பொறியாளர் தினம்: ட்விட்டரில் பொறியியலைக் கொண்டாடும் பதிவர்கள் #EngineersDay
நாம் பயன்படுத்தும் குண்டூசி தொடங்கி கணிப்பொறி வரை, அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்கள் முதல் பயணிக்கும் சாலைகள், குடியிருக்கும் வீடுகள், பறக்கும் விமானம், மிதக்கும் கப்பல் ஆகியவை வரை தயாரிக்கப்படுவதன் பின்னணியில் ஒரு பொறியாளரின் பங்களிப்பு இருக்கும். உயிர் காக்கும் பல மருத்துவ உபகரணங்களும் இவற்றில் அடக்கம்.
மழைக் காளான்கள் போல தமிழகத்தில் அதிகரித்த பொறியியல் கல்லூரிகள், போதிய அளவில் பொறியாளர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாதது, பொறியியல் படித்தவர்களை வேறு துறைகளில் பணியில் சேர்வது போன்ற காரணங்களால் பொறியியல் கல்வி சமூக ஊடகங்களிலும், திரைப்படங்களிலும் சமீப ஆண்டுகளில் ,மென்மையான கேலிக்கு உள்ளாகி வருகிறது. எனினும், பொறியியலில் தேவையும் முக்கியத்துவமும் அணு அளவும் குறையவில்லை.
சமீபத்தில் உலகமே இந்தியாவைத் திரும்பிப்பார்க்க வாய்த்த சந்திராயன் 2 திட்டம் கூட பொறியாளர்களால்தான் சாத்தியமானது.
கட்டுமானப் பொறியாளரும், பாரத் ரத்னா விருது பெற்றவருமான விஸ்வேஷ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஐ இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து இன்று ட்விட்டரில் #EngineersDay #EngineeringInspiration என்ற ஹேஷ்டகுகள் பிரபலமாகி வருகின்றன.
பொறியியல் தினத்தையொட்டி ட்விட்டர் சமூக ஊடகத்தில் பதியப்பட்ட சில நகைச்சுவைப் பதிவுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
பொறியாளராக பணிபுரியாவிட்டாலும் பொரியாளர் தினத்துக்கு வாழ்த்து கிடைக்கும்போது என பதிவிட்டுள்ளார் ஒரு ட்விட்டர் பதிவர்.
ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர் சமையல் செய்தால் எப்படி இருக்கும்?
கடைசி மணித்துளியில் ஒரு பொறியாளர் சிறப்பாக வேலை செய்வார் என்கிறது ஒரு பதிவு.
பொறியியல் படித்தவர் கனவு காண்பது ஒன்று நனவாக இருப்பது ஒன்று.
பொறியாளராக இருப்பதால் நான் ஏன் பெருமைப்படுகிறேன்?
பொறியியல் படிப்பவருக்கு 'டஃப் சப்ஜெக்ட்' என்று தனியாக எதுவுமே இல்லை. பொறியியல் டஃப்தான்.
பல ஆண்டுகளாக இணையத்தில் பிரபலமாக இருக்கும் ஓர் அறிவியல் பதிவு, பொறியாளர் தினமான இன்று மீண்டும் உயிர்பெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்