You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெக்சிகோ: கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட 44 உடல்கள் - என்ன நடந்தது?
தடயவியல் துறை வல்லுநர்கள் மெக்சிகோவில் உள்ள ஜலிஸிகோ மாநிலத்திலிருந்து 44 உடல்களைக் கண்டெடுத்து உள்ளனர்.
அந்த கிணற்றிலிருந்து மனித உடல்களின் சிதிலங்கள் 119 கறுப்புப் பையிலிருந்து எடுத்துள்ளனர். கிணற்றிலிருந்து துர்நாற்றம் அடிக்கிறது என அதன் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் புகார் அளித்தனர்.
ஜலிஸிகோ மாநிலமானது மெக்சிகோ நாட்டின் மத்தியில் உள்ளது.
மனித உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளது. இவை யாரது உடல் பாகங்கள் என அடையாளம் காணப்படவில்லை.
அந்தப் பகுதியில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், உடல் பாகங்களை அடையாளம் காணப்படச் சிரமமாக உள்ளதால் தடயவியல் நிபுணர்கள் அனுப்புமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
புறாக்களை வைத்து அமெரிக்கா உளவு பார்த்தது எப்படி?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்