தமிழ்நாட்டில் மின்சாரப் பேருந்துகள்: பத்து தகவல்கள்

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள மின்சாரப் பேருந்துகள் தொடர்பான 10 தகவல்கள் இதோ...
1. தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் சோதனை அடிப்படையில் மின்சாரத்தில் இயங்கும் பேருந்து சேவை இன்று துவங்கப்பட்டுள்ளது.
2. FAME INDIA - 2 திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 65 நகரங்களில் 5595 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர், தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 595 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவிருக்கின்றன.
3. முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மயிலாப்பூர், அடையாறு வழியாக திருவான்மியூர் வரை காலை இரண்டு முறையும் மாலை இரண்டு முறையும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.
4. 32 இருக்கைகளைக் கொண்ட இந்தப் பேருந்துகள் முழுமையாக குளிர்சாதன வசதியும் தானியங்கிக் கதவுகளும் கொண்டவை. ஜி.பி.எஸ். வசதியும் இந்தப் பேருந்தில் உண்டு.
5. 9.3 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பேருந்து லித்தியம் அயன் மின்கலம் மூலம் இயங்கும். ஒவ்வொரு முறையும் மின்கலம் மாற்றப்பட்டு பேருந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.இந்த மின்கலத்தில் ஒரு முறை மின்சாரத்தை நிரப்பினால், 40 கி.மீ. பயணம் செய்ய முடியும்.
7. இந்தப் பேருந்து ஒரு முறை சென்ட்ரலில் இருந்து திருவான்மியூர் சென்று, மீண்டும் சென்ரல் வந்தவுடன் மின்கலம் மாற்றப்படும்.
8. இந்தப் பேருந்துகள், பேருந்தைத் தயாரித்த அசோக் லேலாண்ட் நிறுவன ஓட்டுனர்களாலேயே இயக்கப்படும்.
9. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக நான்கு முறை மின்கலங்களை மாற்றுவதன் மூலம் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பேருந்துகளை இயக்க முடியும்.
10. மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் சென்ட்ரல் - திருவான்மியூர் வழித்தடத்தில் இந்த மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும்.
பிற செய்திகள்:
- காஷ்மீர் விவகாரம்: ‘எங்களின் பிரச்சனைகளை நாங்களே தீர்த்துக்கொள்வோம்’ - நரேந்திர மோதி
- ப.சிதம்பரத்தை மேலும் 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோருகிறது சிபிஐ
- பி.எஸ்.எஃப். பிரிவுபசார நிகழ்வால் படையில் அதிருப்தி ஏற்படக் காரணம் என்ன?
- வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை - சம்பவம் தொடர்பாக 51 பேர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












