You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கார்த்தி சிதம்பரம் பேட்டி: ‘’இந்திராணி முகர்ஜியை நான் சந்தித்ததே இல்லை’’
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் தலைவர் இந்திராணி முகர்ஜி, இயக்குனர் பீட்டர் முகர்ஜி ஆகியோரை தான் சந்தித்ததே இல்லை என்று ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், ''என் வாழ்க்கையில் பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரை நான் பார்த்ததே இல்லை. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜரானபோதுதான் இந்திராணியை நான் பார்த்தேன்'' என்று அவர் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், ''இந்திராணி, பீட்டர் ஆகியோரின் நிறுவனத்துடன் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ யாரிடமும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை'' என்று குறிப்பிட்டார்.
டெல்லி ஜந்தர்மந்தரில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக எம்.பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் தான் கலந்து கொள்வதாக கார்த்தி சிதம்பரம் மேலும் கூறினார்.
சென்னை விமானநிலையத்தில் இன்று காலையில் பேசிய கார்த்தி சிதம்பரம், காஷ்மீர் சர்ச்சையை திசைமாற்ற ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறினார்.
முன்னதாக ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பாக சி.பி.ஐ. நடத்திய சோதனைகளில் இதற்கென வழங்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் மதிப்பிலான வவுச்சர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக 2018-ஆம் ஆண்டு மே மாதம் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில் புதன்கிழமை இரவு ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகளால் ப சிதம்பரம் செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்