You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய முஸ்லிம் வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனரா?
- எழுதியவர், சஞ்சய் குமார்
- பதவி, சமூக ஆய்வாளர்
(இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)
2019 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றதுபோல, அமோக வெற்றியை ஒரு கட்சி பதிவு செய்கிறபோது, வெற்றிபெற்ற தரப்புக்கு எல்லாம் சாதகமாக அமைந்தது என்றும், தோல்வியடைந்த தரப்புக்கு அனைத்தும் இழப்பாகி விட்டது என்றும் நம்பக்கூடிய நிலை உள்ளது.
தேசிய அளவில் பாஜக இத்தகைய பெரிய வெற்றியை பெற்றுள்ளதால், இந்த நம்பிக்கை வலுவாகியுள்ளது. இதன் காரணமாக, உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி வைத்திருந்தாலும், இந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார்கள் என்கிற நம்பிக்கை ஆழமாகியுள்ளது.
2014ம் ஆண்டு 40 சதவீதமாக இருந்த வாக்கு விகிதம் பாஜகவுக்கு 2019ம் ஆண்டு 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ள மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்பதே இங்கு வைக்கப்படும் வாதம்.
இந்த மாற்றம் முஸ்லிம் ஆண்களிடத்தில் கணிசமானதாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலுள்ள முஸ்லிம் பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்துளதாக தெரிகிறது.
பாஜக அரசின் முதலாவது ஐந்தாண்டில் சட்டமாக நிறைவேறிய முத்தலாக் தடை சட்டத்தால் முஸ்லிம் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகளில் பாஜக பெற்றுள்ள வாக்குகள் அதிகமாக இருந்தது இந்த வாதத்திற்கு வலிமை சேர்த்தது.
10 சதவீத முஸ்லிம் வாக்குகளுக்கு குறைவாக இருந்த மக்களவைத் தொகுதிகளில் முஸ்லிம் வாக்காளர்கள் 34.9 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
ஆனால், 10 முதல் 20 சதவீதம் வரை முஸ்லிம் வாக்காளர்கள் வாழும் மக்களவைத் தொகுதிகளில், பாஜகவுக்கு 39.2 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.
முஸ்லிம்களின் வாக்குகள் அதிக அளவில் இருந்த மக்களவைத் தொகுதிகளில், பாஜகவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 43.8 சதவீதம் அதிகரித்திருப்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.
முதல் அட்டவணை
முஸ்லிம்கள் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கலாம் என்பதால், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மக்களவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு வாக்குகள் அதிகரித்திருக்கிறது என்று எண்ணிக்கொள்வது மிகவும் எளிதாக இருக்கலாம்.
இது உண்மையாக இருந்தாலும், பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட முத்தலாக்கிற்கு எதிராக சட்டம் முஸ்லிம் பெண்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றிருக்கிறது.
ஆனால், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த முஸ்லிம்களின் வாக்குகள் கணிசமாக அதிகரித்தது தொடர்பாக எந்த சான்றுகளும் இல்லை.
1996 முதல் 2014ம் ஆண்டு வரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் தோராயமாக 7 - 8 சதவீத முஸ்லிம் பெண்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளதாக வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இருந்து மதிப்பிடப்படுகிறது.
2009ம் ஆண்டு இதில் விதிவிலக்கு. அந்த தேர்தலில் 4 சதவீத முஸ்லிம் பெண்களே பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர்.
சிஎஸ்டிஎஸ் நடத்திய வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை வைத்து பார்த்தால், இந்த தேர்தல்களில் 2014ம் ஆண்டு முஸ்லிம்கள் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் வழங்கிய ஆதரவு ஏறக்குறைய சமமாக இருந்தது.
8 சதவீத முஸ்லிம்கள் பாஜகவுக்கும், 33 சதவீதததினர் காங்கிரஸூக்கும், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் மாநிலக் கட்சிகளுக்கும் வாக்களித்திருந்தனர்.
இந்தத் தேர்தல்களில் முஸ்லிம் பெண்களிடம் வாக்களிப்பதில் மாற்றம் ஏற்பட பாஜகவுக்கு வாக்களித்தனர் என்று கூறுவதும் சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும்.
சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில், முஸ்லிம் ஆண்கள் அல்லது பெண்களிடம் பாஜகவுக்கு வாக்களிப்பதில் எந்த வித்தியாசத்தையும் வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் தரவுகள் சுட்டிக்காட்டவில்லை.
கிரமங்களில் வாழும் முஸ்லிம்களும், சிறிய நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் வாழும் முஸ்லிம்களின் வாக்களிக்கும் முறையில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது தெரிகிறது.
நகர்புறங்களில் வாழும் முஸ்லிம்கள் அதிகம் பேர் காங்கிரஸூக்கும், பாஜகவுக்கும் வாக்களித்துள்ளனர். சிலர் மாநில கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
தேசிய அளவில் பாஜகவுக்கு முஸ்லிம்களின் வாக்களித்துள்ள விகிதத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியாமல் இருந்தாலும், அரசியல் போட்டியின் இயல்போடு தொடர்புடைய மாநில முறையில் மாற்றங்களை காண முடிகிறது.
காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையில் நேரடிப் போட்டி நிலவிய மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக முஸ்லிம்கள் வாக்களித்துள்ளனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கார் மற்றும் இன்னும் சிலவற்றில், தோராயமாக 15 முதல் 20 சதவீத முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்.
இது பெரிய ஆச்சர்யத்தை வழங்கவில்லை. கடந்த காலங்களிலும் இருமுனை போட்டி நிலவும் மாநிலங்களில் பாஜகவுக்கு முஸ்லிம்களின் ஆதரவு அதிகமாகவும், மாநிலக்கட்சிகள் போட்டியிட்ட மாநிலங்களில் குறைவாகவும் இருந்துள்ளது.
இரண்டாவது அட்டவணை
மூன்றாவது அட்டவணை
நான்காவது அட்டவணை
*வளர்ச்சி அடைந்து வரும் சமூகங்களின் ஆய்வு மைய (சிஎஸ்டிஎஸ்) இயக்குநராக இந்த கட்டுரைரை எழுதிய சஞ்சய் குமார் பணிபுரிந்து வருகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்