You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடுதலைப் புலிகள் மீதான தடை: இந்தியாவில் நீட்டிப்பு
இந்தியாவில் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களுக்கான 'ஈழம்' எனும் தனி நாடு அமைப்பதற்கான கோரிக்கையுடன் செயல்பட்ட விடுதலை புலிகள் அமைப்பு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கடத்த 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திடம் விடுதலை புலிகள் அமைப்பு தோல்வியடைந்த பிறகும் கூட, தனி ஈழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை உள்ளூரிலும், சர்வதேச அளவிலும் அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகின்றனர். இது நாட்டின் பிராந்திய ஒற்றுமையைக் குலைப்பதால் இதன் மேல் உள்ள தடையை நீட்டிக்க வேண்டி உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
14 மே 2014 ல் UPA சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் மீதும் அதன் ஆதரவாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகள் இணையதள வலைத்தளங்கள் மூலமாக விடுதலைப் புலிகளின் தோல்விக்கு காரணம் இந்திய அரசாங்கம் தான் என பரப்பி வருவதால் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மனதில் இந்திய அரசாங்கத்தின் மீதான வெறுப்பு ஏற்பட்டு இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தமிழ்நாட்டில் காணப்பட்டதாகவும் அவர்கள் தடையை தாண்டி தங்கள் ஆதரவைப் பெருக்குவதாகவும் இந்திய கொள்கைகளை எதிர்ப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட காரணத்தால் விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டவிரோதமான அமைப்பாக கருதப்படுகிறது என்று மேலும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்