You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொல்கத்தா காவல்துறையால் துணை ராணுவம் தாக்கப்பட்டதா? உண்மை என்ன? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
மேற்கு வங்க போலீஸ் தேர்தல் பணியின்போது மத்திய பாதுகாப்பு படையை தாக்கியது போல ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த காணொளி குறித்த விவரிப்பு வாசகத்தில் : "மம்தா பேகமுடைய போலீஸ், மத்திய படையைகூட விடுவதில்லை. இந்த காணொளியை பகிருங்கள், தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
90 விநாடிகள் இந்த காணொளி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.
இதே காணொளி மற்றொரு விவரிப்புடனும் பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ரோஹிஞ்சா அகதிகள் மத்திய படையை தாக்குவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், எங்கள் ஆய்வுல் இது தவறானது என தெரியவந்துள்ளது.
அந்த காணொளியில், கோபமான கும்பல் அரசு வாகனங்களை தாக்குவது தெரிகிறது.
தாக்கப்பட்ட வாகனத்தில் இருக்கும் காயம்பட்ட மக்கள் நீல நிற ஆடை அணிந்திருக்கிறார்கள்.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்டது போல் அல்லாமல், காவலர்கள் கட்டுக்கடங்காத அந்த கும்பலை கட்டுப்படுத்துகிறார்கள்.
உண்மை என்ன?
ரிவெர்ஸ் இமேஜ் மூலம் தேடியதில், உள்ளூர் தொலைக்காட்சியான நியூஸ் பிரிடண்ட்டில் இந்த செய்தி வெளியாகி உள்ளது தெரிய வந்தது.
இந்தாண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி வெளியான அந்த செய்தியில், தேசிய நெடுஞ்சாலை 31இல் நடந்த விபத்தில், ஜல்பைகூர் ராஜ்கஞ் செளகி பகுதியில் இரண்டு உள்ளூர் மக்கள் பலியாகி உள்ளனர். கொதித்தெழுந்த மக்கள் வன்முறையில் இறங்கி உள்ளனர். அதன் காணொளிதான் இது.
- https://www.newsbritant.com/bn/54332/
ராஜ்கஞ்ச் காவல் நிலையத்திலிருந்து விபத்து நடந்த பகுதிக்கு காவலர்கள் செல்ல தாமதமாகிவிடுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் போலீஸ் வாகனத்தை தாக்கி இருக்கிறார்கள். இதில் போலீஸாரும், தன்னார்வலர்களும் காயமடைந்தார்கள்.
கோபமடைந்த கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போலீஸ் அவர்களுக்கு அஞ்சி மறைந்து கொள்கிறது. கும்பலை கட்டுப்படுத்த அதிகமான போலீஸ் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது.
ஜல்பைகுரி காவல் கண்காணிப்பாளர் அமித்பா மைதியிடம் பிபிசி உண்மை பரிசோதிக்கும் குழு பேசியது.
மைதியும் இதனை உறுதிபடுத்தினார்.
மைதி, "ஒரு லாரியும் பைக்கும் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். நாங்கள் விசாரிக்க சம்பவ இடத்திற்கு சென்ற போது, கோபமாக இருந்த கும்பல் போலீஸை கற்களை கொண்டு தாக்கியது, போலீஸ் வாகனத்தையும் உடைத்தது. இதனால் போலீஸாரும், தன்னார்வலர்களும் காயமடைந்தனர். கும்பலை கட்டுப்படுத்த போலீஸ் முயற்சித்தது."
மேலும் அவர், "மத்திய படையை மம்தவின் காவல் துறை தாக்கியது, ரோஹிஞ்சா அகதிகள் தாக்கினர் என்று கோருவது பொய்" என்றார்.
பகிரப்பட்ட செய்தி: மம்தா பேகமுடைய போலீஸ், மத்திய படையை தாக்குகிறது.
பகிரப்பட்ட பக்கம்:
மதிப்பீடு: பொய்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்