இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுத்து போலீஸார் தாக்கினார்களா? உண்மை என்ன? #BBCFactcheck

    • எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
    • பதவி, பிபிசி நியூஸ்

வாக்களிக்க செல்லும் இஸ்லாமியர்களை போலீஸார் இணைந்து தாக்குவதைப் போன்ற ஒரு காணொளி சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த காணொளியின் கீழே, "மோதி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா, போலீஸார் இணைந்து முஸ்லிம்கள் வாக்களிப்பதை தடுக்கின்றனர். இதனை ஊடகத்தினர் பகிரமாட்டார்கள். தயவுசெய்து நீங்கள் பகிருங்கள். மோதி மற்றும் ஆர்.எஸ்.எஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த காணொளி ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரம் முறை பகிரப்பட்டிருக்கிறது.

OSIX MEDIA' என்ற ஃபேஸ்புக் பக்கம் இந்த காணொளியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, "தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் போலீஸை பயன்படுத்தி இஸ்லாமியர்கள் வாக்களிப்பதை தடுக்கிறார்கள். மோதி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவ சேனா பெண்களை, குழந்தைகளை, வயதானவர்களை தாக்குகிறார்கள். வரும் தேர்தலில் நிச்சயம் பங்குகொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தது.

பிபிசி நேயர்களும் இந்த காணொளியை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்து, இதன் உண்மைதன்மையை பரிசோதிக்க கோரி இருந்தார்கள்.

நாங்கள் பரிசோதித்ததில் இந்த காணொளியுடன் பகிரப்படும் விஷயம் உண்மை அல்ல என்று தெரியவந்தது.

உண்மை என்ன?

ரிவர்ஸ் இமேஜ் மூலமாக இந்த காணொளியை பரிசோதித்ததில், இந்த காணொளியுடன் தொடர்புடைய பல செய்திகள் கிடைக்கிறது.

ஊடக தகவல்களின் படி,1ஏப்ரல் 2019, இந்த காணொளி குஜராத் அகமதாபாத் விரம்கம் நகரத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

  • https://www.akilanews.com/Saurashtra_news/Detail/01-04-2019/106689

ஊடக தகவல்களின்படி பத்திபுரா பகுதியில் மதியவேளையில் ஒரு பெண், இஸ்லாமியர்கள் உடல்களை அடக்கம் செய்யும் இடத்தில் உள்ள ஒரு சுவரில் துணியை காயப்போட முயற்சித்த போது, சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். அப்போது நடந்த சம்பவம் இது.

  • https://indianexpress.com/article/india/six-hurt-15-detained-in-group-clash-in-ahmedabad-5651940/

இது தொடர்பாக அகமதாபாத் புறநகர் பகுதி காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசாரியிடம் பேசினோம்.

"இது ஒரு மாத பழைய சம்பவம். மார்ச் 31ஆம் தேதி அந்த பகுதியிகல் தாகூர் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே ஒரு பெண் இஸ்லாமிய அடக்கதலத்தில் துணி காய வைத்தது தொடர்பாக தகராறு மூண்டது. இது பெண் வன்முறையாக உருவெடுத்தது." என்கிறார் அசாரி.

மேலும் அவர், "போலீஸார் அந்த பகுதிக்கு சென்ற பின், சில மக்கள் போலீஸாரை தாக்கினர் மற்றும் கற்களை கொண்டு அடித்தனர். போலீஸார் சிலரை கைது செய்தனர். அந்த காணொளிக்கும் இந்த தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறான தவறான செய்திகளுடன் பகிர்பவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம்."என்றார்.

பொய்

ஆக, வாக்களிக்க சென்ற இஸ்லாமியர்களை போலீஸ் தடுத்தது என்று பகிரப்படும் செய்தி பொய் என நம் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அந்த காணொளி தவறான தகவல்களுடன் பகிரப்பட்ட சமூக ஊடக கணக்குகள்:

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :