மகாராஷ்டிரா மாவோயிஸ்ட் தாக்குதல்: பாதுகாப்பு படையினர் 16 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில், போலிஸ் வாகனத்தின்மீது மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதுகாப்பு படையை சேர்ந்த 15 பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்று கூறப்படுகிறது.
பாதுகாப்பு படையை சேராத ஓட்டுநர் ஒருவரும் இதில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது சக்தி வாய்ந்த கண்ணிவெடி தாக்குதல் என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட வீரர்கள் அனைவரும் மகாராஷ்டிரா போலீசின் சி 60 கமாண்டோ படையை சேர்ந்தவர்கள்.
சி60 கமாண்டோ படை என்பது என்ன?
மாவோயிஸ்டுகளின் கொரில்லா தாக்குதல் உத்தியை எதிர்கொள்வதற்காக மகாராஷ்டிரா போலீஸ் புதிய சிறப்பு அணியை உருவாக்கியது. இதில் உள்ளூர் பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர்.
1992-ல் தொடங்கப்பட்ட இந்த அணியில் 60 பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த அணியின் பலம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இவர்களின் செயல்பாடும் அதிகரித்தது.
இவர்களுக்கு பழங்குடிகளின் பண்பாடு, மொழி, தகவல்கள் தெரியும் என்பது மாவோயிஸ்ட் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு உதவியாக அமைந்திருந்தது.
கண்டனம்
இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இதுதொடர்பாக மஹராஷ்டிர மாநில முதலமைச்சரை தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்