பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றது

பட மூலாதாரம், Reuters
புனேவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஜோடி பெண்களை மசூதிகளுக்குள் பிரார்த்தனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தனர்.
இதையடுத்து இன்று மத்திய அரசு, தேசிய பெண்கள் கமிஷன், மத்திய வக்பு வாரியம், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது இந்திய உச்ச நீதிமன்றம்.
நீதிபதி எஸ்.ஏ போப்டே மசூதிகளில் பிரார்த்தனை செய்வதற்கு இருக்கும் தடையை நீக்கக்கோரும் புனேவைச் சேர்ந்த முஸ்லிம் ஜோடியின் மனுவை ஏற்றுக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
''நாங்கள் இந்த மனுவை விசாரிக்க ஏற்றுக்கொண்டதற்கு காரணம் சபரிமலை கோயில் குறித்த விவகாரத்தில் நாங்கள் அளித்த தீர்ப்புதான்'' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
''இந்தியாவில் பெண்களை மசூதிகளில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்காமல் தடை விதிப்பது சட்ட விரோதமானது மேலும் அரசியலமைப்புக்கு எதிரானது, இது பெண்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல். ஆகவே இந்த தடையை நீக்குவதற்கான வழிகாட்டுதல்கள் தேவை'' என முஸ்லிம் ஜோடி தனது மனுவில் கூறியிருந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








