You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அரசு அமைக்கத் தேவையான அளவு தொகுதிகளில் போட்டியிடுவது பாஜக மட்டுமல்ல #BBCFactCheck
- எழுதியவர், சுப்ரீத் அனேஜா
- பதவி, உண்மை கண்டறியும் குழு, பிபிசி நியூஸ்
பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் அரசு அமைப்பதற்கு கட்டாயமாக வெல்லக்கூடிய அளவு தொகுதிகளில் போட்டியிடவில்லை என்கிற பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மே மாதம் 23ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.
"இந்தியாவில் அரசு அமைக்க 273 தொகுதிகளை வெல்ல வேண்டும். காங்கிரஸ் கட்சி 230 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது! எஸ்பி 37, பிஎஸ்பி 37, ஆர்ஜேடி 20, டிஎம்சி 42. இதன் மூலம் வேறு எந்த கட்சியும் அரசு அமைப்பதற்கு போட்டியிடவில்லை . அரசு அமைப்பதற்கு தேவையான தொகுதிகள் பாஜக-வுக்கு கிடைக்காமல் செய்யவும், நாட்டை முடக்கிவிடவும் அவை போராடி வருகின்றன" என்று இந்த வைரல் சமூக ஊடகப் பதிவு குறிப்பிடுகிறது.
"வி சப்போட் நரேந்திர மோதி" போன்ற வலது சாரி ஃபேஸ்புக் குழுக்கள் பலவற்றால் இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது.
'ஷேர்சேட்' போன்ற தளங்களில் பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது.
இதனுடைய உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்காக எமது வாட்ஸப் வாசகர்களும் எமக்கு இதனை அனுப்பியுள்ளனர்.
இந்த வைரல் பதிவிலுள்ள கூற்று தவறு என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
உண்மை கண்டறிதல்
இந்திய மக்களவையில் 543 இருக்கைகளும், இரண்டு நியமன இருக்கைகளும் உள்ளன. இந்தியாவில் அரசு அமைப்பதற்கு முயலும் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி குறைந்த பட்சம் 272 இருக்கைகளை வென்றிருக்க வேண்டும்.
அரசு அமைப்பதற்கு கட்டாயமாக தேவைப்படும் 272 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக போட்டியிடுவது உண்மையே. இதுவரை இந்த கட்சி 433 வேட்பாளர்களின் பெயர்களை வழங்கி 19 பட்டியல்களை வெளியிட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் 230 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது என்று குறிப்பிடுவது தவறாகும்.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளம் பல்வேறுபட்ட தொகுதிகளில் போட்டியிடும் ஒருங்கிணைந்த பெயர் பட்டியலை வழங்குகிறது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி), சமாஜ்வாடி கட்சி (எஸ்பி) மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகியவை பிரதேச கட்சிகளாகும்.
பிரதேச அளவில் செயல்பட்டு வருவதால் இந்த நான்கு கட்சிகளும் குறைவான வேட்பாளர்களின் எண்ணிக்கையை கொண்டுள்ளன. தங்களின் மாநிலங்களில் இந்த பிரதேச கட்சிகள் போட்டியிடுகின்றன.
உத்தர பிரதேசத்தில் செயல்படும் சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 38 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இவை இரண்டும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
பிகாரில் செயல்படும் ராஷ்டிரிய ஜனதா தளம், அது போட்டியிடுகின்ற 20 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் பல்வேறுபட்ட தொகுதிகளில் போட்டியிடுகின்ற 42 வேட்பாளர்களின் பெயர்களை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்களில் பாஜகவும், காங்கிரஸும் வேட்பாளர்களை போட்டியில் இறக்கியுள்ளன.
230 வேட்பாளர்களின் பெயர்களைதான் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது என்று தெரிவித்திருப்பது முற்றிலும் தவறானது.
அரசு அமைப்பதற்கு தேவையான 272 தொகுதிகளை விட மேலாக 379 வேட்பாளர்களை உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்