You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராகுல் காந்தி: காங்கிரஸின் மர்மமான மூன்றாவது கை பற்றிய உண்மை என்ன? #BBCFactCheck
- எழுதியவர், உண்மை கண்டறியும் குழு
- பதவி, பிபிசி நியூஸ்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வயதான பெண்ணொருவரை கட்டியணைக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் இந்த புகைப்படம், இதிலுள்ள மர்மமான மூன்றாவது கரம் எதுவென பலரை கேள்வி கேட்க வைத்துள்ளது.
டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தாஜ்யின்டர் பால் சிங் பேக்கா, "இது யாருடைய மூன்றாவது கை? நல்லதொரு மக்கள் தொடர்பு முகமையை பணியில் அமர்த்த நான் நேற்றுதான் உங்களிடம் தெரிவித்தேன்" என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் விளம்பரத்தில் இந்த புகைப்படம் உள்ளது.
ஏபிபி செய்தி பத்திரிகையாளர் விகாஸ் பௌதவ்ரியாவும், "ராகுல் காந்தியின் முதல் படத்தில் மூன்று கைகள் இருப்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் இரண்டாவதை பாருங்கள். இந்த மூன்றாவது கை யாருடையது? என்று கேள்வி எழுப்பி ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸின் இந்த "கை சாதுரியம்" அக்கட்சியின் ஊழல் மனப்பான்மையை சுட்டிக்காட்டுவதாக பாஜக அமைச்சர் ஸ்மிரிதி ராணி கருத்து தெரிவித்துள்ளார்.
உண்மை என்ன?
நியாய் எனப்படும் காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் விளம்பரத்திற்காக இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறுபட்ட மக்கள் பின்னணியில் இருக்கின்ற பெரிய படத்தின் ஒரு பகுதிதான் இது.
பின்னணி மங்கலாக்கப்பட்ட புகைப்படம் இந்த விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஏழ்மையை ஒழிப்பதற்கு காங்கிரஸின் லட்சிய திட்டத்தை விளபரப்படுத்தும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ரிவர்ஸ் புகைப்பட தேடலில் இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.
2015ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்ட பின்னர், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பல படங்கள் பகிரப்பட்டுள்ளன.
புகைப்படத்தின் பின்னணி மங்கலாக்கப்பட்டுள்ளது. ஆனால், நியாய் திட்டத்திற்கான விளம்பரமாக இந்த புகைப்படத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, அந்த மனிதரின் கையை தெரியாதவாறு செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இந்த புகைப்படத்தில் மூன்றாவது கை ஒன்று இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். ஆனால், அது இன்னொரு காங்கிரஸ் கட்சி பணியாளரின் கரமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்