You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முற்றிலும் முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்; காங்கிரஸ் - பாஜக அறிக்கைகளின் விரிவான அலசல்
2019 மக்களவை தேர்தலில் முதல்கட்டம் நடைபெற இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தனது அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிட்டது.
இந்தியாவில் ஏப்ரல் 11ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கைகளில் மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
முரண்படும் பாஜக - அதிமுக தேர்தல் அறிக்கைகள்
பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்று அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பும் பாஜகவின் அறிக்கையில் இல்லை.
அதிமுக தேர்தல் அறிக்கைகளில் இடம் பெற்றிருந்த எந்த ஒரு அம்சத்தையும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முன்வைத்திருந்தன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் அது இடம் பெற்றுள்ளதா?
பாஜக - காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : ஓர் ஒப்பீடு
வேலைவாய்ப்பு
விவசாயம்
கல்வி
மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு
தேசிய பாதுகாப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்