ஜிஎஸ்டி வரி குறைப்பால் வீடுகளின் விலை குறையும் என்பது உண்மையா?

பட மூலாதாரம், AFP / getty
- எழுதியவர், டி.எஸ்.என். மூர்த்தி
- பதவி, பட்டய கணக்காளர், ஹைதராபாத்
(இந்த கட்டுரையில வருகின்ற கருத்து்ககள் இதனை எழுதிய கட்டுரையாளரின் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி, ஏப்ரல் 1, 2019 தேதி முதல், மலிவு விலை வீடுகளுக்கு 1 சதவீதமாகவும், பிற வீடுகளுக்கு 5 வீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு, வீடு வாங்குபவருக்கு பயனுள்ளதா அல்லது வாங்குபவர் மேலும் பணம் செலுத்த வேண்டி வருமா என்பதை ஆராய்வோம்.

பட மூலாதாரம், Creative Touch Imaging Ltd./NurPhoto via Getty Ima
பழைய கட்டணங்கள்:
31-03-2019 வரை வாங்கப்பட்ட குடியிருப்புகளில், மலிவு விலை வீடுகளுக்கு 8 சதவீதமும், கட்டப்பட்டுவரும் பிற வீடுகளுக்கு 12 சதவீதமும் பெற்றுக்கொள்ளும் உரிமை கட்டுமான உரிமையாளருக்கு உள்ளது.
கிடைக்கப்பெற்ற தொழில் துறை தரவுகளின்படி, கட்டுமான உரிமையாளருக்கு, இரு பிரிவிலும் உள்ள வீடுகளுக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி வரவு, விற்பனை விலை சுமார் 8% ஆகும். விற்பனை விலையை நிர்ணயிக்கும்போது, உள்ளீட்டு வரவும் சேர்க்கப்படும். இதன்மூலம், வீடு வாங்குபவருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி வரவு, விற்பனை விலையை குறைப்பதுபோல சேர்க்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
எனவே, இதன் விளைவாக வீடு வாங்குபவர் வேறுபட்ட ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டியிருந்தது. செலுத்த வேண்டிய மொத்த ஜி.எஸ்.டி.-யில், உள்ளீட்டு வரி வரவு, கட்டுமான உரிமையாளரால் கழிக்கப்பட்டது.
புதிய ஜி.எஸ்.டி. விகிதங்களுடன் மற்றொரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்.
புதிய சதவீத கட்டமைப்பின் கீழ், மலிவு விலை வீடுகளுக்கு ஜி.எஸ்.டி. வரி 1 சதவீதமாகவும், பிற வீடுகளுக்கு 5 வீதமாகவும் குறைக்கப்பட்ட போதிலும், கட்டுமான உரிமையாளர்களுக்கு பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.


உள்ளீட்டு வரியில், கட்டுமான உரிமையாளர்களுக்கு உரிமை இல்லை.
உள்ளீட்டு வரியில் கட்டுமான உரிமையாளர்களுக்கு உரிமை இல்லாததால், அவர்கள் செலுத்தும் மொத்த ஜி.எஸ்.டி.-யும், செலவில் சேர்க்கப்படும். மொத்த ஜி.எஸ்.டி.-யும் செலவில் சேர்க்கப்படும்போது, வீட்டின் விலை அதிகரித்து, வாங்குபவர் மீது சுமத்தப்படும். வீடு வாங்குபவர்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGES
80 சதவீத உள்ளீடுகளும், உள்ளீட்டு சேவைகளும், பதிவு செய்யப்பட்ட நபர்களிடமிருந்து வாங்கப்படும். பதிவு செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்பட்ட உள்ளீடுகள் மற்றும் உள்ளீட்டு சேவைகள், 80 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால், பின்னோக்கு கட்டண விதி (RCM) அடிப்படையில், கட்டுமான உரிமையாளர் 18% செலுத்த வேண்டும்.
முந்தைய வரி முறையில், பதிவு செய்யப்பட்ட நபர்களிடமிருந்து, 80 சதவீத உள்ளீடுகளும், உள்ளீட்டு சேவைகளும் வாங்க வேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.


கட்டுமான உரிமையாளர்களுக்கு இரண்டு வகையான கொள்முதல்கள் உள்ளன. ஒன்று, பதிவு செய்யப்பட்ட நபர்களிடமிருந்தும் நிறுவனங்களிடம் இருந்தும் வாங்கப்படும் பொருட்களுக்கான செலவு. மற்றொன்று வேலையாகச் செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதியம். குறிப்பாக, கொத்தனார், எலக்ட்ரீஷியன், ப்ளம்பர், தச்சர் ஆகியவர்களுக்கு கொடுக்கப்படும் தொழில் கட்டணங்கள். இது போன்ற சேவை வழங்குபவர்கள், பொதுவாக ஜி.எஸ்.டி-யின் கீழ் தங்களை பதிவு செய்ய விரும்பாத தனிநபர்களாக இருக்கின்றனர்.
அவர்களின், வருடாந்திர வருவாயும் வரி வரம்புக்கு குறைவானதாகவே இருக்கும். இந்த சேவை வழங்குபவர்கள், பதிவு செய்யப்பட்டவர்கள் இல்லை என்பதால், கட்டுமான உரிமையாளர், பின்னோக்கு கட்டண விதி அடிப்படையில் 18% ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும்.
உள்ளீட்டு வரி பெறும் உரிமை கட்டுமான உரிமையாளருக்கு இல்லை என்பதால், பின்னோக்கு கட்டண விதி அடிப்படையில் அவர் செலுத்தும் வரி, வீட்டின் விலையில் சேர்க்கப்படும். இது சொத்தின் விலையை மேலும் உயர்த்தும்.

பட மூலாதாரம், EPA
எளிமையாக பார்த்தோம் என்றால், மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி. விகிதங்கள் காரணமாக, வாங்குபவர்களுக்கு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- கட்டுமான உரிமையாளர்களுக்கு உள்ளீட்டு வரி இல்லை.
- பின்னோக்கு கட்டண விதிப்படி கட்டுமான உரிமையாளரிடமிருந்து வரி வசூலிக்கப்படும்.
எனவே, முந்தைய வரி விகிதத்துடன் ஒப்பிடும்போது, குறைக்கப்பட்ட வரி விகிதத்தால், வீடு வாங்குபவர்கள் அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
மொத்தத்தில், வீடுகளின் விலை குறையும் என்று நம்பி வீடு வாங்குபவர்களை ஜி.எஸ்.டி. கவுன்சில் தவறாக வழிநடத்துகிறது. உண்மையில், குறைப்பு என்ற பெயரில், வீடு வாங்குபவர்களுக்கு செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












