You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய பொதுத் தேர்தல் 2019 - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
தற்போது தொடங்கியுள்ள மக்களவை தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள் இவைதான்.
1.இந்தியாவின் 17வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும். வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது
2.தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதத்தில் அமலுக்கு வந்தது.
3.84.3 மில்லியன் புது வாக்காளர்கள் இந்த தேர்தலில் பங்கேற்கிறார்கள் . அதில் 15 மில்லியன் வாக்காளர்கள் 18 மற்றும் 19 வயதுடையவர்கள். 2019ஆம் ஆண்டு வரை 900 மில்லியன் மக்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டுள்ளனர்.
4.பள்ளிக் கல்லூரித் தேர்வுகள், விழாக்கள், வானிலை அறிவிப்புகள் ஆகியவற்றை மனதில் வைத்துக் கொண்டே தேர்தலுக்கான தேதிகள் திட்டமிடப்பட்டுள்ளன - சுனில் அரோரா.
5.2014ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தலுக்கு 10 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
6.அனைத்து வாக்குச்சாவடிகளிலும், எல்லா வாக்குப்பதிவு இயந்திரங்களும் தாம் வாக்களித்த வேட்பாளருக்கே தமது வாக்கு சேர்ந்துள்ளதா என்பதை வாக்காளர் அறியும் ஒப்புகைச் சீட்டை (VVPAT) அளிக்கும் இயந்திரம் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
7.வாக்காளர்கள் தங்கள் வேட்பாளர்களை அடையாளம் காணும் வகையில், வேட்பாளர்களின் புகைப்படங்கள் இயந்திரங்களில் காட்சிபடுத்தப்படும்.
8.வேட்புமணு தாக்கல் செய்யும்போதே வேட்பாளர்கள் அவர்களது சமூக ஊடக விவரங்களையும் சமர்பிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களும் தேர்தல் செலவினங்களில் சேர்க்கப்பட வேண்டும்.
9.1950 வாக்காளர் உதவி எண். வாக்காளர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இதில் பதில் அளிக்கப்படும்.
10.மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும். ஆந்திர மாநிலத்தை பொறுத்தவரை ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்