பாலகோட் தாக்குதலுக்குப்பின் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு: ''இந்தியாவை அழிக்க விட மாட்டேன்''

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Pool

படக்குறிப்பு, கோப்புப் படம்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்

பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியபின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி ''இந்தியாவின் வீரமகன்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இது. நம் நாடு பாதுகாப்பான கரங்களில் இருப்பதை நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். நம் நாட்டை அழிக்க விடமாட்டேன், தலைகுனியவிட மாட்டேன். நாட்டைவிட எதுவும் பெரிதல்ல,'' எனப் பேசியுள்ளதாக தினகரன் நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை

தினமணி : டாஸ்மாக்கில் மது வாங்க ஆதார் அட்டையை கட்டாயமாக்கலாமா?

ஆதார் அட்டை

பட மூலாதாரம், Mint

டாஸ்மாக் இணையதளத்தை திறந்து பயன்படுத்த முடியாத நிலையில் மதுரையின் தெற்கு வடக்கு பகுதிகளுக்கு மதுக்கூடத்துக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு 7 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டிருப்பதால் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்ற நபர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணையின்போது டாஸ்மாக் திறக்கும் நேரத்தை நண்பகல் 12லிருந்து இரண்டு மணிக்கு மாற்றலாமா? மது அருந்திவிட்டு வாகனங்களை ஒட்டிச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் மதுபான கூடங்களை மூடிவிடலாமா? மது வாங்க வருபவர்களுக்கு ஆதார் அட்டையை காட்டினால்தான் மது வழங்கப்படும் என விதிமுறை கொண்டு வந்தால் சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினர் டாஸ்மாக்கில் மது வாங்குவதை தடுக்க இயலுமா? என உயர் நீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக அந்நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

இலங்கை

இந்தியன் எக்ஸ்பிரஸ் - அயோத்தி நில பிரச்சனையை தீர்க்க நடுநிலையாளர்களை நியமிக்குமா உச்ச நீதிமன்றம்?

அயோத்தி நில பிரச்சனை

பட மூலாதாரம், Hindustan Times

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நில வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் நடுநிலையாளர்கள் மூலம் சிக்கலை தீர்க்க முடிவு செய்வதா என்பதை மார்ச் ஆறாம் தேதி முடிவு செய்யவுள்ளதாக நீதிமன்றம் கூறியள்ளது.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் நிலம் தொடர்பாக நீதிமன்றமே முழு முடிவை எடுக்கும் என தெரிவித்துள்ளது. ராம்லல்லா விரஜ்மான் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் மஹந்த் சுரேஷ்தாஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ரஞ்சித் குமார் நடுநிலையர்களை நியமிக்கும் ஆலிசோணையை எதிர்த்தனர். நடுநிலையாளர்களை நியமிப்பது உதவாது. ஏற்கனவே அதை முயற்சி செய்து பார்த்து விட்டாயிற்று என்றனர்.

''அயோத்தி விவகாரம் நிலம் தொடர்பானது மட்டுமே என உண்மையில் நீங்கள் நினைக்கிறீர்களா? நிலம் தொடர்பாக நீதிமன்றம் தான் முடிவு செய்யும் மேலும் காயமடைந்த உறவுகள் சீராக வேண்டும் என்பதையும் நாங்கள் கருத்தில் கொண்டுள்ளோம்'' நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார் .

கடந்த செப்டம்பர் 20,2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. பிரச்னைக்குரிய 277 ஏக்கர் நிலத்தை நிர்மோஹி அக்காரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம்லல்லா விரஜ்மான் ஆகிய மூன்று பிரிவுக்கும் பகிர்ந்தளித்து தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இலங்கை
ஸ்டாலின்

பட மூலாதாரம், Stalin/facebook

படக்குறிப்பு, கோப்புப் படம்

தினத்தந்தி - திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்த்து காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது என தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தமாகியுள்ளது என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறினார். அப்போது 21 தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என அவர் கூறினார் என்கிறது அச்செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :