புல்வாமா தாக்குதல்: தண்டனை நிச்சயம் - சூளுரைத்த நரேந்திர மோதி

புல்வாமாவில் நடந்த தாக்குதளுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் ஆகியோர் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்றும் அவர்கள் இது தொடர்பாக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும் என்று பிரதமர் எச்சரித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பதில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திர மோதி, ''இது போன்ற தாக்குதல்களால் இந்தியாவை நிலைகுலைய வைத்துவிடலாம் என்ற மாயையில் பாகிஸ்தான் இருக்கவேண்டாம். பாகிஸ்தானின் கனவு நிறைவேறாது'' என்று கூறியுள்ளார்.

சிறப்புஅந்தஸ்தை ரத்து செய்த இந்தியா

உலக வர்த்தக நிறுவனத்தின் சரத்துகளின்படி, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வழங்கியிருந்த 'மிகவும் நெருக்கமான நாடுகள்' எனும் அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானுடனான வர்த்தகத்தில் அந்நாட்டுக்கு இந்தியா குறைவான வரிகளை விதித்து வந்தது.

இதுவரை பாகிஸ்தான் இந்தியாவுக்கு இந்த அந்தஸ்தை வழங்கவில்லை.

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :