காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆண்டது எத்தனை ஆண்டுகள்?#BBCFactCheck

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாயார் சோனியா காந்தி

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, பிப்ரவரி 7ம் தேதி 16வது மக்களவையின் கடைசி உரையை இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆற்றியுள்ளார்.

இந்த உரையில், தனது 55 மாத தேசிய சேவையை காங்கிரஸ் கட்சியின் 55 ஆண்டுகால அரசியல் அதிகாரத்தோடு ஒப்பிட்டு, காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவே நடத்திய பேரணிகளில் காங்கிரஸை இலக்கு வைத்து நரேந்திர மோதி தாக்கி பேசி வந்தார்.

"காங்கிரஸ் கட்சிக்கு 60 ஆண்டுகள் வழங்கினீர்கள், அவர்கள் உங்களுக்கு எதுவும் வழங்கவில்லை. தவறுதலாக ஆண்டார்கள். இந்நாட்டினை சரிசெய்ய 60 மாதங்கள் எனக்கு கொடுங்கள்" என்பது அவரது பரப்புரை சொற்களாகும்.

2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசியபோது, "60 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏழைகளுக்கு உதவியிருந்தால் ஏழைகள் பிரச்சனைகளை சந்தித்திருக்க மாட்டார்கள். 60 ஆண்டுகால தவறுதலான ஆட்சியை நாம் கண்டு கொள்ளாமல் விட்டுவிட முடியாது" என்று மோதி பேசினார்.

இலங்கை
இலங்கை

இந்தியாவில் காங்கிரஸின் ஆட்சி காலம் பற்றி வெவ்வேறு ஆண்டு எண்ணிக்கைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த காலம் பற்றி பாஜகவின் பிற தலைவர்களும் குழப்பத்தில் உள்ளதாகவே தோன்றுகிறது.

2014ம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோதி பதிவிட்ட ஒரு ட்விட்டில், காங்கிரஸ் இந்தியாவை 60 ஆண்டுகள் ஆண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

2018ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் 70 ஆண்டுகள் ஆட்சி நடத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இது தொடர்பாக பிபிசி மேற்கொண்ட ஆய்வில் காங்கிரஸ் நேரடியாக மொத்தம் 54 ஆண்டுகள், 4 மாதங்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளன என தெரிய வந்துள்ளது.

நேரடியாக அல்லாமல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு 2 ஆண்டுகளும் 10 மாதங்களும் இந்தியாவை ஆட்சி செய்ததை சேர்த்து பார்த்தால், 56 ஆண்டுகள் 2 மாதங்கள் இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.

இலங்கை
இலங்கை

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவை 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கி 1977ஆம் ஆண்டு மார்ச் 27ம் தேதி வரை தொடர்ந்து ஆட்சிபுரிந்தது,

இந்த 29 ஆண்டுகளாக (சரியாக 26 ஆண்டுகள், 7 மாதங்கள், 9 நாட்கள்) பண்டிட் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, குல்சாரி லால் நாந்தா மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.

இந்திரா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images

1980ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மீண்டும் நேரடி ஆட்சிக்கு வந்தது காங்கிரஸ் கட்சி. 1984ஆம் ஆண்டு வரை இந்திரா காந்தி பிரதமராக இருந்தார், அதன்பின் அவரது படுகொலைக்கு பின்னர் ராஜீவ் காந்தி 1989ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தனர். (சரியாக 9 ஆண்டுகள், 10 மாதங்கள், 19 நாட்கள்).

1991ஆம் ஆண்டு நிகழ்ந்த ராஜீவ் காந்தி படுகொலை, அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. 1991ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவை பிரதமராக தேர்ந்தெடுத்து மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், 1996ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் தொடர்ந்தது (சரியாக 4 ஆண்டுகள், 10 மாதங்கள், 26 நாட்கள்).

அதன் பிறகு 8 ஆண்டுகளுக்கு பின்னர், மன்மோகன் சிங் பிரதமாராக இருக்க 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஆட்சி செய்தது (சரியாக 10 ஆண்டுகள், 4 நாட்கள்).

நேரடியாக மற்றும் காங்கிரஸ் ஆதரவில் ஆட்சி

வெறும் 170 நாட்கள் மட்டுமே 1979ம் ஆண்டு ஜூலை மாதம் சௌத்திரி சரண் சிங் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவரை தொடர்ந்து 1980ம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் அரசு ஆட்சியை பிடித்தது.

1990ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 7 மாதங்கள் இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவோடு இன்னொரு அரசு குறுகிய காலம் ஆட்சி செய்தது. இதுதான் சந்திர சேகர் தலைமையிலான சமாஜ்வாடி ஜனதா கட்சியின் ஆட்சியாகும்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு, சிறுபான்மை அரசு ஒன்று 13 கட்சிகளின் கூட்டணியாக ஐக்கிய முன்னணி அரசு என அமைந்தது.

1997ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதன் ஆதரவை ஐக்கிய முன்னணியில் இருந்து விலக்கி கொள்ளவே 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களவை தேர்தல் நடைபெற இருந்தது.

இடைத்தேர்தலை தவிர்க்க இன்னொரு ஐக்கிய முன்னணி அரசை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. அடுத்த 10 மாதங்கள் எல்.கே.குஜரால் பிதமராக ஆட்சிபுரிந்தார்.

இரும்பு பெண்மணி இந்திரா காந்தி வாழ்க்கையின் முக்கிய தருணங்கள்

காணொளிக் குறிப்பு, இந்திரா காந்தி: பிறப்பு முதல் இறப்பு வரை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :