தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை விடுவித்தது பூனே நீதிமன்றம்

ஆனந்த் டெல்டும்டே

தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறிய பூனே நீதிமன்றம் அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது.

நக்சல்களுடன் தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆனந்த் எல்கர் பரிஷத் வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

இன்று என்னை நீதிமன்றம் விடுவித்திருப்பதில் மகிழ்ச்சி, ஆனால் கைது செய்யப்படும்போது எனக்கு ஏற்பட்ட அவமானத்தை விவரிக்க முடியாது என்று ஆனந்த் டெல்டும்டே தெரிவித்தார்.

சனிக்கிழமை மதியம் நீதிமன்றத்தில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவரது சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரோஹன் நஹர், ஆனந்தின் கைது சட்டவிரோதமானது என்று வாதிட்டார்.

ஆனந்த் மீது இருந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 11-ம் தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

டிசம்பர் 31, 2017ஆம் ஆண்டு நடந்த எல்கான் பரிஷத் விழாவில், ஆனந்த் டெல்டும்டே பேசிய கருத்துகள், பீமா கோரிகான் வன்முறைக்கு வித்திட்டதாக பூனே போலீஸ் கூறுகிறது.

இந்நிலையில் தலித் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டதற்கு, பலரும் பரவலான கண்டனங்களைத் தெரிவித்தனர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அவர் மீது பொய் வழக்கு போட்டிருப்பதை கண்டிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரகாஷ் அம்பேத்கர், "ஆனந்த் டெல்டும்டேவை நக்சலைட்டுகளுக்குடன் தொடர்புபடுத்தி கைது செய்திருப்பது சட்டவிரோதமானது" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :