பிரதமர் மோதிக்கு வழங்கப்பட்ட 'பிலிப் கோட்லர்' விருது போலியா? உண்மை என்ன? #BBCFactCheck

விருது பெற்ற

பட மூலாதாரம், PIB

'நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு தன்னலமற்ற சேவை' செய்ததற்காக ஃபிலிப் கோட்லர் பிரசிடென்சியல் விருது வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோதி கடந்த 15ஆம் தேதி தெரிவித்தார்.

இந்த விருது முதன்முறையாக வழங்கப்படுகிறது என்று பிரதமரின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 'People, Profit and Planet 'என்பதன் அடிப்படையில் இந்த விருது வழங்கப்பட்டதாக பிரதமரின் வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

மார்க்கெட்டிங், தகவல் தொடர்பு மற்றும் வணிக மேலாண்மையில் குறிப்பிட்ட சாதனைகளை செய்தவர்களை சிறப்பிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்று ஃபிலிப் கோட்லர் விருது வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

விருது தொடர்பான சர்ச்சை

மோதியின் டிவிட்டர் பக்கத்தில் இந்த விருது பெறும் புகைப்படம் வெளியானதும், இந்த விருது பிரதமருக்கு கிடைத்த சிறப்பான மரியாதை என்று கூறி பல தலைவர்கள் பாராட்டினர்.

பல்வேறு ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டிருந்தன.

இலங்கை
இலங்கை

ஆனால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமூக ஊடகங்களில் இது குறித்து விமர்சித்துள்ளார்.

"பிரதமர் மோதிக்கு ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்ஷியல் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இவ்வளவு பெருமை வாய்ந்த விருதுக்கு தேர்ந்தெடுப்பதற்கு நடுவர்கள் யாரும் இல்லை.

அதுமட்டுமல்ல, இந்த விருது இதற்கு முன்னதாக வேறு யாருக்கும் வழங்கப்பட்டதில்லை என்பதும், இந்த விருதுக்கு பின்னர் இருக்கும் அலிகர் நிறுவனத்தின் பெயரை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை" என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த கருத்து பதிவிடப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின், ராகுல் காந்திக்கு சூடான பதிலளித்திருக்கும் ஸ்மிருதி இரானி, "இந்த கருத்தை பதிவிடுபவரின் குடும்பத்தினர் தங்களுக்கே பாரத ரத்னா விருது கொடுத்துக்கொண்டவர்கள்" என்று எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

போலி விருது சர்ச்சை

இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள சில ஊடகங்கள் இப்படி ஒரு நிறுவனமே இல்லை. போலி விருதை பிரதமர் மோதி திருப்பி வழங்க வேண்டும் என்று செய்திகள் வெளியிட்டன.

தினகரன் செய்தி

எனவே, இது பற்றிய தகவல்களை பிபிசி இந்தி பிரிவு ஆராய்ந்தது.

முதலில் 'ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்சியல்' விருது பற்றி சில தகவல்கள்

ஃபிலிப் கோட்லர் என்பவர் யார்?

இந்த விருது, ஃபிலிப் கோட்லர் என்ற பேராசிரியரின் பெயரில் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவில் 'கேலாங்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்'டில் கடந்த 50 ஆண்டுகளாக மார்கெட்டிங் பாடத்தை கற்பிக்கிறார் ஃபிலிப் கோட்லர்.

கேலாங்ஸ் பல்கலைக்கழக வலைதளத்தின்படி, கோட்லர், ஹார்வர்ட் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் படித்த பிறகு எம்.ஐ.டியில் முனைவர் பட்டத்தை 1956ஆம் ஆண்டு பெற்றார்.

87 வயது ஃபிலிப் கோட்லர், 'நவீன மார்க்கெட்டிங்கை உருவாக்கியவர்' என்றும், 'மார்க்கெட்டிங் குரு' என்றும் அறியப்படுகிறார்.

'My adventures in marketing' என்கிற தனது சுயசரிதை புத்தகத்தில் மார்க்கெட்டிங் துறையின் எதிர்காலம் பற்றி அவர் விரிவாக எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.

ஃபிலிப் கோட்லர்

பட மூலாதாரம், PKOTLER.ORG/BIO/

படக்குறிப்பு, ஃபிலிப் கோட்லர்

எதற்காக வழங்கப்படுகிறது ஃபிலிப் கோட்லர் விருது?

கோட்லர் விருது என்ற வலைதளத்தின்படி, இந்த விருதை வழங்கும் அமைப்பின் பெயர் 'World Marketing Summit Group'. கனடாவின் டொரண்டோவைச் சேர்ந்த இந்த தனியார் அமைப்பை ஃபிலிப் கோட்லர் 2010ஆம் ஆண்டு தொடங்கினார்.

சர்வதேச மார்கெட்டிங் கூட்டமைப்பு தெரிவிக்கும் தகவல்களின்படி, 2017 டிசம்பர் ஆறாம் தேதியன்று முதன்முறையாக 'கோட்லர் விருது' வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தென் கொரியாவில் உள்ள 'ஷிலா ஹோட்டல்'இல் நடைபெற்றது.

ஆனால் முதன்முறையாக வழங்கப்படும் ஃபிலிப் கோட்லர் பிரெசிடென்ஷியல் விருதுக்கு, நரேந்திர மோதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோதிக்கு விருது வழங்க காரணம்?

உலக மார்க்கெட்டிங் உச்ச மாநாடு குழு அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளில் பிலிப் கோட்லர் மார்க்கெட்டிங் மன்றத்திற்காக ஆண்டுதோறும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.

பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

அதன் தொடர்ச்சியாக, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இந்தியாவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

2017 செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட சர்வதேச சசாவான்ஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டது உலக மார்க்கெட்டிங் உச்ச மாநாடு குழு அமைப்பு.

அதாவது ஓராண்டும், நான்கு மாதங்களுக்கும் முன்னர்தான் சர்வதேச சசாவான்ஸ் ஆய்வு நிறுவனம் என்ற இந்திய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கும் ஜாம்பா வலைதளத்தின்படி, அலிகரின் தோத்புரில் உள்ள சஸ்லென்ஸ் நிறுவனம் கான்புரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கோட்லர் அமைப்புடன் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தியாவில் அந்த அமைப்புக்காக நிகழ்ச்சிகளை நடத்தும் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக சஸ்லென்ஸ் நிறுவனத்தின் வலைதளம் கூறுகிறது.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் டேக் செய்திருக்கும் @WMC_India என்ற டிவிட்டரில் இதுவரை யாருமே எந்தவொரு பதிவையும் இடவில்லை என்பது வியப்பளிக்கும் தகவல்.

இந்த டிவிட்டர் கணக்கை ஒருவர் மட்டுமே தொடர்கிறார், இந்த டிவிட்டர் கணக்கு ஒன்பது பேரை தொடர்கிறது, அவர்கள் அனைவரும் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்கள்.

ட்விட் இடப்படவில்லை

பேராசிரியர் மார்க் ஓப்ரெஸ்னிக் என்பவரின் டிவிட்டரில் இருந்து, மோதிக்கு இந்த விருது கொடுக்கப்பட்டதற்கான நோக்கம் சற்று புரிகிறது.

இவர், கோட்லர் இம்பெக்ட் நிறுவனத்தின் தலைமை ஆராய்ச்சி அதிகாரி.

"எதிர்காலத்தில் இந்தியாவில் அமைப்பிற்கான நிகழ்ச்சியை நடத்தும்போது, உங்களை சந்திக்க விரும்புகிறேன்" என்று அவர் டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பக்கமே இல்லை

சஸ்லென்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தை பார்க்க முயற்சித்தோம், அது இதுவரை உருவாக்கப்படவில்லை.

வலைதளத்தின் ஆவணக் காப்பகத்தில் (archive of the website) காணப்படும் தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற முயற்சித்தோம்.

ஆனால், அந்த தொலைபேசி எண்ணில் பேசியவர், தற்போது அங்கு பணியாற்றவில்லை.

நிறுவனத்தை தொடங்கிய டாக்டர் தெளசிஃப் சித்திகி ஜியாவிடம் மேலதிக தகவல்கள் கிடைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால், டாக்டர் தெளசிஃப்பை நம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் "இது மிகவும் ரகசியமான விருது" என்று த வொயர் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பக்கம் இல்லை

அதோடு,' வேல்ட் மார்கெட்டிங் சம்மிட் 2018 இந்தியா' (World Marketing Summit 2018 India)வின் வலைதளமும் வேலை செய்யவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: