மல்லையா தேடப்படும் குற்றவாளி - வழக்கில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்தது என்ன?

விஜய் மல்லையா

பட மூலாதாரம், Getty Images

மல்லையா தேடப்படும் குற்றவாளி

9,000 கோடி ரூபாய் வாராக்கடன் தொடர்பாக தொழிலதிபர் விஜய் மல்லையாவை "தேடப்படும் பொருளாதார குற்றவாளி' என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமல்படுத்திய, தலைமறைவு பொருளாதார மோசடியாளர் தடுப்பு (எஃப்.ஈ.ஓ.) சட்டத்தின் கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள முதல் தொழிலதிபர் மல்லையா ஆவார்.

இந்த சட்டப்பிரிவின் கீழ், மல்லையாவை குற்றவாளி என அறிவித்து அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.

லண்டம் நீதிமன்றம்

விஜய் மல்லையா

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக. கடந்த டிசம்பர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

விஜய் மல்லையாவை ஒப்படைப்பது தொடர்பாக லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இவ்வாறாக உத்தரவிடப்பட்டிருந்தது.

அப்போது அவர் பகிர்ந்த ட்விட்டில், "நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. கடன் பெற்றது கிங் ஃபிஷர் விமான நிறுவனம்தான். உண்மையில் தொழிலில் நட்டம் ஏற்பட்டது எதிர்பாராமல் நிகழ்ந்தது. கடனுக்கு உத்தரவாதம் வழங்குவது என்பதற்காக, நான் ஏமாற்றினேன் என்று கூறக்கூடாது."

"நான் மூல கடன்தொகையை திருப்பிக் கொடுக்கிறேன் என்ற முன்மொழிவை கொடுத்திருக்கிறேன். அதை தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மல்லையா கூறி இருந்தார்.

line

அமெரிக்காவில் அவசரநிலை கொண்டுவருவேன்

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார்.

அமெரிக்காவில் அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சம்பளமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.

விரிவாக படிக்க:

line

மேகாலயா சுரங்க விபத்து

மேகாலயா சுரங்க விபத்து

பட மூலாதாரம், SANNIO SIANGSHAI

அப்துல் அலிம் எலிப்பொறி போன்ற சுரங்கங்களில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்

இந்தியாவில் வடமேற்கு மாநிலமான மேகாலயாவில் டிசம்பர் 13 ஆம் தேதி 15 பேர் எலிப்பொறி சுரங்கம் என்று கூறப்படும் சுரங்கம் ஒன்றில் சிக்கிக் கொண்டனர். அந்தச் சுரங்கத்தில் வேலை பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று கருதியதால் அங்கிருந்து சில தினங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய சுரங்கத் தொழிலாளியிடம் பிரியங்கா போர்புஜாரி பேசினார்.

அங்கே இருந்திருந்தால் தாமும் கொல்லப்பட்டிருப்போம் என்று அப்துல் அலிம் நம்புகிறார்.

இவருடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள் ஓமர், ஷிராபத் அலி ஆகியோர் மூன்று வாரங்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ள 15 பேரில் அடங்குவர்.

அவர்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அப்துலுக்கு வாய் குளறுகிறது. அவர்கள் இந்நேரம் இறந்திருப்பார்கள் என்று அவர் சொல்கிறார்.

நிலக்கரியை வெளியே எடுத்து வருவதற்கான வாயில் குறுகலாக இருப்பதால் எலிப்பொறி சுரங்கம் என்று இதனைக் குறிப்பிடுகிறார்கள். வெள்ளம் காரணமாக அதனுடைய நுழைவாயில் அடைபட்டுவிட்டது.

அவர்களை மீட்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு தான் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - இதில் அப்துலுக்கு ஆச்சர்யம் ஏதும் கிடையாது.

``நாங்கள் உள்ளே போய்விட்டால், வெளியில் இருந்து வெளிச்சம் உள்ளே வருவது மிக அபூர்வம்'' என்று அவர் நினைவுகூர்கிறார்.

``நான் முன்பு வேலைபார்த்த சுரங்கங்கள் 30 அடி (9 மீட்டர்) அளவுக்கு மட்டுமே ஆழமாக இருந்தன. ஆனால் இது இன்னும் அதிக ஆபத்தானது. இது 400 அடி ஆழமானது.''

சுரங்கத்தின் ஆழத்தைப் பார்த்து பயந்துவிட்டதாக அப்துல் கூறுகிறார்.

line

சீறத் தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்!

காளை

கால்நடைகளை வளர்ப்பு பிராணிகளாக எண்ணாமல் தங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே பாவித்து வளர்ப்பது தமிழகத்தில் மரபு. அதிலும் ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்படும் காளைகள் என்றால் அதற்கென்று தனி அக்கறை உண்டு. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையையும் தயார்படுத்துகின்றனர்.

இதோ பொங்கல் வரப்போகிறது. அதையொட்டி ஜல்லிக் கட்டுப் போட்டிகளும் தொடங்கிவிட்டன.

இந்நிலையில் திருச்சி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் சூழலில், திருச்சி நவலூர் குட்டப்பட்டுவை அடுத்துள்ள பாகனுரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிரத்யேக பயிற்சிகளை அளித்து தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.

காளைகளுக்கும் தங்களுக்குமான பாசப்பிணைப்பை டோமினிக் என்பவர் கூறுகையில், சிறுவயது முதலே காளை வளர்ப்பில் எனக்கு மிகவும் ஈடுபாடு. நகரங்களில் நாய், புறா போன்றவற்றை செல்லப் பிராணிகளாக வளர்ப்பதை போல நாங்கள் காளைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அவற்றை பிராணிகளாக இல்லாமல் எங்களுடன் பிறந்த சகோதரர் போலவே பாவித்து வளர்க்கிறோம். காளைகளும் நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் பின்னேயே அன்புடன் வரும் என்கிறார் இந்த இளம் காளை வளர்ப்பு பிரியர்.

ஜல்லிக்கட்டுக்கவே பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளைகளுக்கு தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கின்றனர். காளையை அடக்குவோர் மிரள வேண்டும் என்பதற்காக, கொம்புகளை கூராக, வலுவாக தயார்படுத்த, காளையை மண் மேடுகளை முட்டி கீறி, சிதறவிடச் செய்து பயிற்சி அளிக்கின்றனர்.

line

சீனா: 2029இல் 1.44 பில்லியன் மக்கள் தொகையை எட்டவுள்ளது

2029ஆம் ஆண்டில், சீனாவின் மக்கள்தொகை 1.44பில்லியன் வரை எட்டுமென்றும், அதன்பிறகு, தடுக்கமுடியாத சரிவை சந்திக்கும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

`சமூக அறிவியல் ஆய்வுகள் குறித்த சீனாவின் அகாடமியா' என்று குறிப்பிடப்படும் சி.ஏ.எஸ்.எஸ் அதிகப்படியான வயது முதிர்ந்த மக்களையும், பணியாற்றக்கூடிய வயதிலுள்ள மிக்குறைவான மக்களையும் சமாளிக்கும் வகையில், ஒரு அரசு கொள்கையை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறுகிறது.

இந்த இரு காரணிகளும் இணையும் போது, `மக்களுக்கு சாதகமற்ற சமூகத்தையும், பொருளாதார பின்விளைவுகளையும்` கொண்டுவரும் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

சீனவின் மக்கள்தொகை 1.41 பில்லியன் என கூறுகிறது ஐ.நாவின் சமீபத்திய அறிக்கை.

சீனா: 2029இல் 1.44 பில்லியன் மக்கள் தொகையை எட்டவுள்ளது

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: