சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பிரகாஷ்ராஜ்: நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்த (2019) புத்தாண்டு இப்படியாக தொடங்கி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
#JustAsking ஹாஷ்டேக்கில் கடந்த ஓராண்டாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மத்தியில் ஆளும் பா.ஜ.கவை கேள்வி கேட்டு வந்தார் பிரகாஷ் ராஜ்.
இன்று அவர் ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், 'நான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக ஒரு தொகுதியில் களமிறங்க போகிறேன் என்றும், எந்த தொகுதி என்று விரைவில் அறிவிக்கிறேன்' என்றும் கூறி இருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
அரசியல் குறித்து பிரகாஷ்ராஜ்
முன்பு பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில், தமக்கு அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்று கூறி இருந்தார். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் அப்போது கூறி இருந்தார்.
கமல் அரசியல் பிரவேசம் குறித்து அவரிடம் கேட்ட போது அவர் இவ்வாறாக கூறி இருந்தார்.
2017ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விளக்கி இருந்தார்.
அவர், "நடிகர்கள் தங்களின் பிரபலத்தின் காரணமாக மட்டும் அரசியலுக்கு வரக்கூடாது. அது மிகப்பெரிய பேரழிவாக இருக்கும். அவர்களுக்கு, இந்த நாடு சந்திக்கும் பிரச்னைகள் குறித்து சரியான புரிதல் இருக்க வேண்டும் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டும். நாமும் வெறும் ரசிகர்களாக மட்டும் வாக்களிக்க கூடாது. ஒரு பொறுப்பான குடிமகனாக வாக்களிக்க வேண்டும்" என்று கூறி இருந்தார்.
விரிவாக படிக்க:நடிகர்கள் அரசியல் தலைவர் ஆவதை எதிர்க்கிறாரா பிரகாஷ்ராஜ்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













