ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜிநாமா

பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் ரிசர்வ் வங்கியின் ஆளுநரான உர்ஜித் படேல் திடீரென ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக ரிசர்வ் வங்கியில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி தான் பெருமை கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
தம்முடைய பதவியில் இருந்து உடனடியாக ராஜிநாமா செய்யும் முடிவை தனிப்பட்ட காரணங்களுக்காக எடுத்ததாக அறிக்கையில் கூறியுள்ள உர்ஜித், பல ஆண்டுகளாக ரிசர்வ் வங்கிக்காக பணியாற்றியது தமக்கு மிகப்பெரிய கௌரவம் என்கிறார்.
ஆர்பிஐ ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் கடும் உழைப்பும் ஆதரவுமே சமீபத்திய வருடங்களில் ஆர்பிஐயின் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்ய காரணம் என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி மற்றும் பிரதமர் மோதி அரசிடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் உர்ஜித் ராஜிநாமா செய்துள்ளார்.
உர்ஜித் படேல், பதவிக்காலத்தின் இடையிலேயே ராஜிநாமா செய்த முதல் ரிசர்வ் வங்கி ஆளுநராவார்.
ஏற்கனவே தொழில்களுக்காக கடன் கொடுத்து முறையாக கடன் தொகை திரும்ப கட்டப்படாததால், அரசுடைமையாக்கப்பட்ட சில வங்கிகள் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் மேற்கொண்டு சிறு தொழில்களுக்காக அவ்வங்கிகள் கடன்தருவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதிக்கவேண்டும் என அரசு விரும்பியதாக கூறப்படுகிறது.
''உர்ஜித் படேல் அப்பழுக்கற்றவர். ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநர், ஆளுநர் பதவி உள்ளிட்டவற்றில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பெரிய அளவிலான பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ஆழமான புரிதலை கொண்டிருக்கக்கூடிய, உயர்திறன் கொண்ட ஓர் பொருளாதார நிபுணர் உர்ஜித் படேல். அவரது தலைமையின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியது ரிசர்வ் வங்கி. '' என ட்வீட் செய்திருக்கிறார் பிரதமர் மோதி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
''ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும், ஆளுநராகவும் உர்ஜித் படேல் நாட்டுக்கு செய்த சேவைகளை பாராட்டத்தக்க ஆழமான உணர்வுடன் அரசு ஒப்புக்கொள்கிறது. அவரது நிபுணத்துவத்தின் பலன்களை பெறவும் அவருடன் பொருளாதார விவகாரங்களை கையாள்வது எனக்கு மகிழ்ச்சியை தந்திருந்தது'' என இந்தியாவின் நிதியமைச்சர் அருண் ஜேட்லி ட்வீட்டில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"இது அனைத்து இந்தியர்களும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்" என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
"உர்ஜித் படேலின் ராஜிநாமா, சூழ்நிலை இன்னும் சரியாகவில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது….முன்பு போல் மோசமான சூழ்நிலைதான் இப்போதும் நிகழ்கிறது. இந்த ராஜிநாமா இந்திய அரசு ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் தலையிடுகிறது என்பதை தெளிவாக காட்டுகிறது" என முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கருத்து
சிபிஐ, இந்திய ரிசர்வ் வங்கி என இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புக்களையும் பாரதீய ஜனதா அரசு வளைத்து நெறிக்க முயல்வதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அந்த நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையான அதிகாரிகள் எதிர்த்து நிற்பது வரவேற்கத்தக்கது என்றார்.
"எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது, ஆர்எஸ்எஸ், பாஜக திட்டம் முன்னேறிக்கொண்டிருக்கிறது, உர்ஜித் படேல் ராஜிநாமா என்று சொன்னார்கள். அரசாங்கத்தால் செயல்பட முடியவில்லை" என்றார் ராகுல் காந்தி.
யார் இந்த உர்ஜித் படேல்?
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் கடந்த 2016 செப்டம்பர் நான்காம் தேதி பொறுப்பேற்றார்.
உர்ஜித் படேலுக்கு முன்னதாக அப்பதவியில் ரகுராம் ராஜன் இருந்தார்.
ரகுராம் ராஜனின் பதவிக் காலம் முடிவடைவதைத் தொடர்ந்து நிதிக் கொள்கைகளுக்கு பொறுப்பு வகிக்கும் துணை ஆளுநரான உர்ஜித் படேல், அடுத்த மூன்றாண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் ஆளுநராக செயல்படுவார் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
55 வயதாகும் உர்ஜித் படேல், உலகின் புகழ் பெற்ற ஏல் பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர்.
முன்னதாக, இந்தியாவின் நிதிக் கொள்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை மேற்கொள்ள பரிந்துரைத்த குழுவின் தலைவராக பதவி வகித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: