விமானத்தில் ’பயங்கரவாதி’ என்று நகைச்சுவை செய்த இளைஞர் கைது

பட மூலாதாரம், Reuters
இந்தியாவில் தனது புகைப்படத்துக்கு பயங்கரவாதி என்ற வார்த்தையை பயன்படுத்திய இளைஞர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
யோக்வேதாந்த் போடார் என்ற அந்த இளைஞர் தனது முகத்தை கைக்குட்டையால் பாதியளவு மூடி, "விமானத்தில் பயங்கரவாதி, நான் பெண்களின் இதயத்தை அழிப்பவன்" என்று பதிவிட்டார்.
இதை பார்த்த சக பயணி விமான ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
அது கொல்கத்தாவிலிருந்து மும்பை சென்றுகொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்.
அந்த புகைப்படத்தை ஸ்னாப் சாட்டில் தனது நண்பருக்கு அனுப்ப இருந்தார் அந்த இளைஞர் என போலிஸார் தெரிவித்தனர்.
இளைஞரை பாதுகாப்பு படைகள் கைது செய்வதற்காக விமானம் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு திருப்பி விடப்பட்டது.
விமான அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தனது 20களில் இருக்கும் அந்த இளைஞர் தொல்லை கொடுக்கும் விதமாக நடந்து கொண்டதாலும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் விதமான வார்த்தைகளை பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதை அந்த இளைஞர் விளையாட்டாக செய்ததாக அவரின் தந்தை உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
100க்கும் மேற்பட்ட விமானிகளை கொண்ட அந்த விமானம் இதனால் ஒன்றரை மணி நேரம் தாமதமாக செலுத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












