You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'லேட்டா வந்தாலும், கரெக்டா வரணும்; வந்தா கண்டிப்பா அடிக்கணும்" - ரஜினி
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தினமலர்: 2.0 பட டீசர் வெளியீடு
"லேட்டா வந்தாலும், கரெக்டா வரணும். வந்தா கண்டிப்பா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன்" என நடிகர் ரஜினி எந்திரன் ட்ரெயிலர் வெளியிட்டு விழாவில் பேசியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் ட்ரெயிலர் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ரஜினி, இந்தப் படத்திற்காக 600 கோடி ரூபாய் செலவு செய்த சுபாஷ் கரன், தன்னை நம்பி பணத்தை போடவில்லை என்றும் ஷங்கரை நம்பியே பணம் போட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஷங்கர் இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டிவன் ஸ்பீல்பர்க் என்றும் அவர் தெரிவித்தார்.
இப்படம் தாமதாகிவிட்டதாக அனைவரும் கூறினார்கள். லேட்டா வந்தாலும், கரெக்டா வரணும். வந்தா கண்டிப்பா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன். இந்தப்படம் உலக அளவுக்கு பேசப்படும் என்றும் ரஜினி பேசியதாக அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.
தினமணி: சபரிமலையில் கமாண்டோ படை
சபரிமலையில் மாதாந்திர பூஜை நடத்துவதற்காக திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு நடை திறக்கப்படவுள்ளது. கடந்த மாதம் இதே போன்று நடை திறக்கப்பட்ட போது, பெண்களை அணுமதிக்க மறுத்து கடும் போராட்டங்கள் நடைப்பெற்றதை கருத்தில் கொண்டு, இந்தமுறை காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 100 பெண் காவலர்கள் உள்ளிட்ட 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 20 பேர் அடங்கிய கமாண்டோ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல இடங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து தீபாவளி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அச்செய்தி விவரிக்கிறது.
தி இந்து (ஆங்கிலம்) - தமிழக அரசு விரைவில் கடிதம்
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழக அரசு விரைவில் கடிதம் எழுத உள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
7 பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவெடுப்பதை துரிதப்படுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) நிரன்ஜன் மாடி இக்கடிதத்தை எழுதுவார் என செய்தி வட்டாரங்கள் என்கிற்றது இச்செய்தி.
பிற செய்திகள்:
- சிரியா - ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள 50,000 மக்கள் - உதவிகளுடன் ஐ.நா குழு வருகை
- சோதனைக் குழாயில் வளர்க்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள்
- 'மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்போம்' - தமிழ் தேசியக் கூட்டமைப்பு
- 'மஹிந்த ராஜபக்ஷ தேவைப்படும்போது பெரும்பான்மையை நிரூபிப்பார்': டக்ளஸ் தேவானந்தா
- திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: