You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிரியா - ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள 50,000 மக்கள் - உதவிகளுடன் ஐ.நா குழு வருகை
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்
சிரியா - ஜோர்டான் எல்லையில் ஜ.நா உதவிக்குழு
சிரியா - ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முதலுதவிகள் செய்ய அதற்கு தேவையான பொருட்களுடன் ஐ.நா உதவிக்குழு வந்தடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து முதன்முறையாக அவர்களுக்கு உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.
அக்டோபர் 27ஆம் தேதி ருக்பன் முகாமிற்கு வரவிருந்த உதவிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது.
ருக்பனை அணுகுவதை சிரியா ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஜோர்டானும் அப்பகுதிக்கு உதவி வழங்குவதை தடுத்து வருகிறது.
மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பல உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின.
ஃப்ளோரிடாவில் துப்பாக்கிச்சூடு
ஃப்ளோரிடாவில் யோகா பயிற்சியகத்தில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
61 வயதான நான்சி வன் விசிம் மற்றும் 21 வயதான மாரா பிங்கிலி ஆகிய இருவரும் டல்ஹசியில் உள்ள யோகா பயிற்சி மையத்தினுள் நுழைந்தவுடன் ஸ்காட் பால் பெரிலி சுட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பெரிலி இவ்வாறு செய்ததற்கான நோக்கம் இன்னும் தெரியவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வாக்கெடுப்பு
பிரெஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் உள்ள வாக்காளர்கள், பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமாக செயல்பட வேண்டுமா என்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்கின்றனர்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினைவாதிகளின் வன்முறை பிரசாரம் செய்ததை தொடர்ந்து போடப்பட்ட ஒப்பந்தத்தின் ஓர் பகுதியாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பாரிஸில் காலனித்துவ அதகாரிகளின் கட்டுப்பாட்டை தூக்கி எரிய உள்ளூர் கனக மக்கள் வாக்களிக்க வேண்டும் என சுதந்திரத்தை ஆதரிக்கும் குழுக்கள் வலியுறுத்தின.
எனினும், அங்குள்ள மக்கள் சுதந்திரத்தை புறக்கணிப்பாளர்கள் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தெய்வ நிந்தனை வழக்கு
தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணின் கணவர், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார்.
ஆசியா பிபி என்ற அந்த பெண்ணின் கணவர் ஆஷிக் மாசி பாகிஸ்தானில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்தார்.
புதன்கிழமையன்று ஆசியா பிபி மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஆதரங்கள் வலுவானதாக இல்லை என நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
2010ஆம் ஆண்டு பக்கத்து வீட்டினருடன் நடந்த சண்டையில், முகமது நபிகளை அவமதித்து பேசியதாக ஆசியா பிபி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: