தமிழகத்தில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படாதது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 இடங்களுக்கு மட்டும் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி நடைபெறும். ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் ஒரே கட்டமாக டிசம்பர் 7ஆம் தேதியும், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28ஆம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறும்.
இந்நிலையில் காலியாக உள்ள திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்த எந்த அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
தமிழகத்தின் இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராவத், தமிழகத்தில் பருவமழை காலம் என்பதால் தற்போது இடைத் தேர்தல் நடத்தவேண்டாம் என்று தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், அதைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












