தனியனாக கடலில் சிக்கிய இந்திய கடலோடி மீட்பு

தனியாக கடலில் சென்று சிக்கி தவித்த இந்திய கடலோடி அபிலாஷ் மீட்கப்பட்டதாக இந்திய கப்பற்படை கூறுகிறது.

உலகம் சுற்றும் கடலோடி

கோல்டன் க்ளோப் உலகத்தை சுற்றிவரும் படகுப்போட்டியில் கலந்து கொண்டு தீவிரமாக காயமடைந்துள்ள இந்திய மாலுமியை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் முயற்சித்து வந்தனர்.

தனியாக சென்ற மாலுமி அபிலாஷ் டாமி, மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையில் இருந்து 3,200 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சிக்கிக்கொண்டார்.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட கடும் புயலால் அவரது படகு, 'துரியா' உடைந்து போனது. இது தொடர்பாக அவர் அனுப்பிய செய்தியில் தாம் படுகாயம் அடைந்துள்ளதாகவும், இடத்தை விட்டு நகர முடியாமல் இருப்பதோடு, சாப்பிட மற்றும் குடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

மீட்பு

இந்த சூழ்நிலையில் இந்திய கப்பற்படையின் செய்தி தொடர்பாளர், அபிலாஷ் டாமி மீட்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்திய கப்பற்படையின் செய்தி தொடர்பாளர் ட்விட்டர் கணக்கு, 'டாமி பத்திரமாக மீட்கப்பட்டு விட்டார்' என ஒற்றை வரி செய்தியை பகிர்ந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :