பஞ்சாப்: 16 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைக்கு காரணம், பசுமைப்புரட்சியா, பாராமுகமா?

    • எழுதியவர், பிரியங்கா துபே
    • பதவி, பிபிசி

"என் மகன் இறுதியாக வீட்டிற்கு வந்த அந்த மாலைப் பொழுதிலும் நாங்கள் வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்."

16000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் வசிக்கும் 75 வயது முதியவர் முக்தியார் சிங், அந்திச் சூரியன் வானத்தில் இருந்து இறங்கும் சமயத்தில், தனது கண்களை இடுக்கிக்கொண்டு வானத்தை பார்க்கிறார்.

அவரது கண்களில் நீர் பெருகுகிறது, பெருமூச்சு விடும் அவரின் முகத்தில் இருந்து பெருகுவது வியர்வைத் துளிகள் என்றாலும், அவரின் தோற்றமோ, உடல் முழுவதும் கண்ணீர் விடுவது போல் தோன்றுகிறது.

விரக்தியுடன் பேசும் அவர், "என் மகன் இறுதியாக வீட்டுக்கு வந்த சமயத்தில், அவனும் இப்படித்தான் வானத்தை பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிடு என்று மனைவி சொன்னதற்கு வேண்டாம் என்று பதில் சொன்னான். பணம் இருந்த குடும்மா என்று மகன் கேட்டதற்கு, இப்போது பணம் எதற்கு என்று என் மனைவி கேட்டாள்."

line
line

வானில் வட்டமிடும் கழுகை பார்த்துக் கொண்டே அந்த பிப்ரவரி மாத குளிர் மாலைப் பொழுதில், முக்தியாரின் மகன் குர்லால் தாயிடம் பணம் கேட்டபோது, அவன் முகத்திலும் வியர்வைத் துளிகள் துளிர்த்திருந்தனவாம்!

வானத்தையே பார்த்தா என்ன அர்த்தம்? காரணத்தை சொல் என்ற கேட்ட தாய்க்கு பதிலளித்த குர்லால், வனத்தில் பறவைகள் வட்டமிடுகின்றன என்று சொல்லிக்கொண்டே வாயில் நுரை தள்ள மயங்கி கீழே விழுந்தார்.

பதறிப்போன முக்தியாரும் அவரது மனைவியும் மகனை தூக்கி கட்டிலில் படுக்க வைத்தார்கள். அவன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வந்திருந்தான் என்பது அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. உடல்நிலை சரியில்லை என்று நினைத்த பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

16000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

ஆனால் வானத்தில் பறவைகள் வட்டமிடுவதைப் பார்த்துக் கொண்டே பூமியில் வீழ்ந்தவன் மீண்டும் எழுந்திருக்கவே இல்லை. மண்ணோடு மண்ணாய் போய்விட்டான் என்று சொல்லி குலுங்கி அழுகிறார் அந்த முதியவர்.

"25 வயது மகனை தன் கண் முன்னே சாகக் கொடுத்த பெற்றோர் உயிருடன் இருந்தாலும் நடை பிணங்களே" என்று வறண்ட புன்னகையுடன் சொல்கிறார் முக்தியார்.

பர்னாலா மாவட்டம் பத்ரா கிராமத்தில் வசிக்கும் விவசாயி முக்தியார் சொன்னது போன்ற 70 சோகக்கதைகளுக்கு சாட்சியாக இருக்கிறது அந்த கிராமம். விவசாயத்திற்காகவும், தனது இரண்டு மகள்களின் திருமணச் செலவுகளுக்காகவும் ஐந்து லட்ச ரூபாய்வரை கடன் வாங்கியிருந்தார்கள் முக்தியாரின் குடும்பத்தினர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

கடன் கொடுத்தவர் வீட்டிற்கு வந்து கடனை திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது குர்லாலுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. தங்கள் குடும்பத்தின் அவலநிலையை கண்டு மனம் வெதும்பிக் கொண்டிருந்த குர்லால், குடும்பத்தின் கஷ்டத்தை போக்கவும், மூன்று வேளை சரியான உணவைக்கூட குடும்பத்தினருக்கு கொடுக்க முடியவில்லையே, என்ன வாழ்க்கை இது என்ற விரக்தியிலும் இருந்தார். ஆனால் மகன் இந்த அளவு உடைந்து போயிருப்பான் என பெற்றோர் நினைக்கவில்லை.

மகனைப் பற்றிய பேச்சை எடுத்ததும், தாய் கதறி அழத்தொடங்கிவிட்டார். மகனுடன் இறுதியாக பேசிய வார்த்தைகள் அவரது மனதில் பசு மரத்தாணி போல் பதிந்துவிட்டன. மகனின் போட்டோவை எங்களுக்கு காட்டினார் அந்த தாய்.

திரைப்படங்களில் காட்டப்படும் வழக்கமான கிராமங்கள் என் கண்முன் நிழலாடின. பச்சைபசேலென்று பரந்து விரிந்த வயல்வெளிகள், பால் தரும் கறவை மாடுகள் கொண்ட வீட்டின் மாட்டுத் தொழுவம், வீட்டு முற்றத்தில் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து பேசிச் சிரிக்கும் மனிதர்கள் என விவசாயம் செழித்தோங்கிய கிராமங்களே நினைவுக்கு வந்தன.

16, 000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

ஆனால் புள்ளிவிவரங்கள் சொன்ன நிலையோ வேறு. கிராமம், விவசாயம், தற்கொலை, என பல்வேறு கேள்விகளுடன் டெல்லியில் இருந்து பஞ்சாப் நோக்கி பயணித்து பர்னாலா, சன்கர்ரூர், மனசா மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டோம்.

நாட்டில் பசுமைப்புரட்சி ஏற்பட்ட காலத்தில் வேகமாக முன்னேறிய பஞ்சாப் மாநில விவசாயிகளின் இன்றைய நிலை என்ன? எந்த கிராமங்களில் கோதுமை மற்றும் நெற்பயிர்களின் விளைச்சல் அமோகமாய் இருந்ததோ, அதே கிராமங்கள் இன்று விவசாயிகளின் கல்லறை பூமிகளாய் மாறிப்போன காலக்கொடுமையை என்ன சொல்ல?

இந்த கேள்விகளுக்கான பதிலை பர்னாலா மாவட்டத்தின் பூடானா கிராமத்தில் வசிக்கும் 47 வயது ஹர்பால் கெளரிடம் இருந்து தெரிந்துக் கொண்டோம்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

வாழ்க்கை முழுவதும் கடுமையாக உழைத்த என் கணவர், ஒரு டிசம்பர் மாத குளிர்காலத்தில் கால்நடைகளை காவல் காப்பதற்காக வயலுக்கு சென்றார். அதுதான் நான் அவரை கடைசியாக பார்த்த சந்தர்ப்பம் என்று அந்த வருத்தமான நிகழ்வை பகிர்ந்துக் கொள்கிறார் ஹர்பால் கெளர்.

ஹர்பால் கெளரின் வார்த்தைகளில் மட்டுமல்ல, அவரது வீட்டின் நிலைமையிலும் சோகம் எதிரொலிக்கிறது. ஹர்பாலின் கணவர் பகவான் இந்த ஆண்டு ஜனவரி மாதம்தான் தற்கொலை செய்துக் கொண்டார்.

ஒரு குடும்பம் - மூன்று தலைமுறை - நான்கு தற்கொலை

50 வயது பகவான், அவரது தந்தை, சித்தப்பா, தாத்தா என மூன்று தலைமுறையை சேர்ந்த நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டார்கள் என்ற செய்தி நிலைமையின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.

16000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

சோகம் கப்பிய அந்த வீட்டில் துன்பமும் தன் உடலின் ஓர் அங்கம்போல் சோகப்பதுமையாக நிற்கிறார் ஹர்பால். கனத்த மனதுடனே நான் அவரைப் பார்த்து பேசினேன்.

"எங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் கால்நடைத் தீவனங்களை பயிரிடுகிறோம். குத்தகைக்கும் நிலம் எடுத்து விவசாயம் செய்வோம். கடந்த வருடம் 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிரிட்டிருந்தோம். நன்றாக வளர்ந்து கொண்டிருந்த பயிர், பனியால் கருகிவிட்டது.

ஏற்கனவே ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் கணவருக்கு மன அழுத்தமும் சேர்ந்துக் கொண்டது. எப்போதும் சோகமாகவே இருப்பார். எட்டு லட்ச ரூபாய் கடன் என்பது எங்களைப் போன்ற ஏழை விவசாயிகளுக்கு மிகப்பெரிய சுமை. நான் தனிமரமாகிவிட்டேன் என்று அழுதுக்கொண்டே புலம்புவார். நிலைமை எங்கள் கட்டுப்பாட்டை மீறிவிட்டது".

line
line

தன் திருமணத்திற்கு முன்பிருந்தே கணவரின் குடும்பம் வறுமையில்தான் இருந்தது என்று சொல்கிறார் ஹர்பால். தனது திருமண வாழ்க்கையில் கடன் இல்லாத நாட்களையே அவர் பார்த்ததில்லை என்று சொல்கிறார்.

"என் கணவர் கடுமையான உழைப்பாளி, விவசாய வேலைகள் அனைத்தையும் அவர் ஒருவரே செய்ய வேண்டியிருந்தாலும், அதற்காக அவர் என்றைக்குமே வருத்தப்பட்டதோ, சலித்துக் கொண்டதோ கிடையாது."

குடும்பத்தை அழுத்திக் கொண்டிருந்த கடன் சுமை அதிகரித்துக் கொண்டே போனதே தவிர, ஒருநாளும் குறையவேயில்லை.

16, 000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

"கால்நடைகளை கட்டும் கயிற்றில் தூக்குப்போட்டுக்கொண்டார்"

அந்த கொடுமையான நாளை நினைவுகூர்கிறார் ஹர்பால் கெளர். "பால் கறப்பதற்காக நான் எழுந்தேன். என் மகளும் கூடவே எழுந்தாள், அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை முதலில் பார்த்ததும் அவள்தான்".

"கடன் சுமை தாங்காமல் முதலில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது என் கணவரின் தாத்தா, பிறகு என் மாமனார், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து இறந்துபோனார், பிறகு கணவரின் சித்தப்பா... வீட்டின் மூத்தவர்கள் இறந்தபிறகு, வீட்டுப் பொறுப்பும், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பையும் என் கணவர் தனியாகவே செய்ய வேண்டியிருந்தது.

சித்தப்பாவின் மகள்கள், தன்னுடைய சகோதரிகள் என அனைவரின் திருமணத்தையும் என் கணவர் செய்து முடித்தார். ஆனால், தான் பெற்ற மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய நிலையில் கையில் சுத்தமாக பணமே இல்லை.

குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் எல்லா பொறுப்பையும் தன் தலையில் போட்டு விட்டு நிம்மதியாக தற்கொலை செய்துக் கொண்டார்கள், இப்போது நான் என்ன செய்வேன் என்று என்னிடம் புலம்புவார்" என்று கணவரின் மன வேதனையை நம்மிடம் சொல்கிறார் ஹர்பால் கெளர்.

ஆனால் இப்போது, அவர் தனது சுமையை தன்னுடைய தோளில் சுமத்திவிட்டு சென்றுவிட்டார், அவரது சுமையை பகிர்ந்துக் கொள்ளவாவது நான் இருந்தேன், இனி எனக்கு யார் இருக்கிறார்கள் என்று அழுகிறார் ஹர்பால் கெளர்.

விவசாயம்
படக்குறிப்பு, மகளுடன் ஹர்பால்

ஏற்கனவே குடும்பத்தின் மூன்று ஆண்கள் கடன் சுமையால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தனது கணவனும் அதே போன்ற முடிவை எடுத்துவிடுவாரோ என்ற அச்சம் ஹர்பாலுக்கு அவ்வப்போது ஏற்படுமாம்.

2018, ஜனவரி 15ஆம் தேதி இரவு, கால்நடைகளுக்கு காவல் இருப்பதற்காக பகவான் சிங் வயலுக்கு கிலம்பியபோது, இரவு உணவையும் அவருக்கு கொடுத்து அனுப்பினார் ஹர்பால். அனைவரும் உறங்கிய பிறகு வீட்டிற்கு வந்த பகவான் சிங், தூக்கு மாட்டிக் கொண்டார். அடுத்த நாள் உதித்த சூரியன் உலகத்திற்கே வெளிச்சத்தை தந்தாலும், ஹர்பாலின் குடும்பத்தை ஆழ்ந்த இருளில் தள்ளிவிட்டது.

அந்த இரவு, ஹர்பாலின் வாழ்க்கையில் என்றுமே மீள முடியாத இரவு. வீட்டின் ஒரு அறையில் ஹர்பாலும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த அறையில் பகவான் தூக்கு மாட்டிக் கொண்டார்.

காலையில் எழுந்தவுடன், தந்தை தூக்கில் தொங்குவதைப் பார்த்த மகள் அலறிய சப்தம் ஊரையே கூட்டிவிட்டது. உடலை கீழே இறக்கியதும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நினைத்தோம், ஆனால் உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டது என்று, அங்கு கூடியிருந்தவர்கள் சொல்லி விட்டார்கள்".

கிராமத்தை சேர்ந்த அனைவரும் எங்கள் வீட்டை தற்கொலையின் குறியீடாகவே பார்க்கிறார்கள். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இதே வீட்டில் தற்கொலை செய்து இறந்துபோனால் வேறு என்ன சொல்வார்கள்?

விவசாயம்

அரசு தரப்பில் இருந்தும் ஹர்பால் கெளருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. கணவரின் மரணத்திற்கு பிறகு குடும்பத்தின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. கணவர் இருந்து அவர் ஓரளவு சம்பாதித்தபோதே, கடன் சுமையில் தள்ளாடிய குடும்பம், இப்போது என்ன செய்யப்போகிறது? இந்த கேள்வியால் குடும்பத்தினர் திகைத்து நிற்கிறார்கள்.

மகனை படிக்க வைக்கவேண்டும், மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும், வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என மூன்று மிகப் பெரிய கடமைகள் ஹர்பால் கெளரின் முன் பிரம்மாண்ட சவாலாய் நிற்கிறது.

மாடுகளில் இருந்து பால் கறந்து விற்பனை செய்து குடும்பத்தின் பசியை ஓரளவு ஆற்ற முடிவதாக சொல்கிறார் ஹர்பால். ஆனால் மற்ற செலவுக்கு பணம் கிடைப்பதில்லை என்று சொல்லும் ஹர்பால், அப்பா இறந்தபிறகு நடந்த தேர்வுகளில் தனது மகன் பாசாகவில்லை என்று சொல்லி வருத்தப்படுகிறார்.

இனி மகளுக்கு திருமணம் செய்வதற்கு மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டம் என்ற நிதர்சனத்தையும் எதிர்கொள்கிறார் ஹர்பால்.

விவசாயம்

கடன் சுமையால் நான்கு பேர் தற்கொலை செய்துக் கொண்ட குடும்பத்தின் பெண்ணை யார் திருமணம் செய்துக் கொள்ள முன்வருவார்கள்? அவ்வளவு ஏன்? எங்கள் வீடு, உயிர் காவு வாங்கும் வீடு என்று சொல்லி, உறவினர்கள்கூட வீட்டுக்கு வர பயப்படுகிறார்கள்.

எங்கள் எதிர்காலமே இருண்டு போய் கிடக்கிறது, என்ன செய்வது என்றே புரியாமல் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார் ஹர்பால்.

6 ஆண்டுகளில் 15 ஆயிரம் தற்கொலை

பஞ்சாப் மாநிலம் என்றால், பசுமைப் புரட்சி, செழிப்பு, பங்க்ரா நடனம், மகிழ்ச்சியான விவசாயிகள் என்ற எண்ணங்களையே தோற்றுவித்த அந்த மாநிலத்தின் இன்றைய நிலைமைக்கு சாட்சியாக இருப்பது முக்தியார் போன்ற விவசாயிகள் என்பது காலத்தின் கோலம் என்று சொல்வது மிகையாகாது.

மூன்று பல்கலைகழகங்களின் உதவியுடன் பஞ்சாப் மாநில அரசு, விவசாயிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மேற்கொண்ட அதிகாரபூர்வமான ஆய்வுகளின்படி, 2000-2015ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பஞ்சாபில் 15,606 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன.

விவசாயம்
படக்குறிப்பு, பல்தேவ் கெளரின் குடும்பம்

இதில் 87 சதவிகிதத்தினர் விவசாயக் கடன்களை திருப்பச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டவர்கள்.

அரசின் இந்த தரவுகள் பஞ்சாப் மாநிலத்தின் நிலைமையை முழுவதுமாக எடுத்துக் காட்டியிருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். தற்கொலை செய்துக் கொண்ட விவசாயிகளில் 76 சதவிகிதத்தினர் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களை வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள்.

பல்தேவ் கௌர்

மன்சா மாவட்டம் பீம்காலா கிராமத்தில், விவசாய கூலித்தொழிலாளி குடும்பத்தின் தலைவர் பல்தேவ் கெளரை சந்தித்தோம்.

கல்வியறிவு இல்லாத பல்தேவ் கெளர், கணவன் மற்றும் வயது வந்த மகன் தற்கொலை செய்துக் கொண்ட பிறகு கவிஞரைப் போல், தனது துக்கத்தை பாடலாக பாடி வெளிப்படுத்துகிறார். விவசாயிகளின் உரிமைகளுக்காக நடைபெறும் பேரணிகளில், பல்தேவ் கெளரின் பாடல்கள், உரிமைக்கான அவசியத்தை விவரிக்கும் வலிமைமிக்க ஆயுதமாக பயன்படுகிறது.

"தற்கொலை என்பதே விவசாயிகளுக்கான தீர்வா? கைம்பெண்ணாவதே எங்களுக்கு விதிக்கப்பட்ட விதியா? உங்கள் தட்டில் விழும் சோற்றுக்காக வேலை செய்யும் நாங்கள் சாப்பிட வேண்டாமா?" என்று நேரடியாக தான் அனுபவித்த, அனுபவிக்கும் வேதனைகளை, கூர் மிகுந்த ஈட்டி போன்ற வார்த்தைகளாய்த் தீட்டி, தனது வெண்கலக்குரலில் பாடுகிறார் பாடலாய் பாடுகிறார் .

விவசாயம்

"நாங்கள் விவசாயத் தொழிலாளர்கள். எங்களிடம் நிலமில்லை. வெறும் 8,000 ரூபாய் ஆண்டு கூலிக்காக ஜமீன்தாரின் பண்ணையில் கூலித் தொழிலாளியாக என் கணவர் வேலை பார்த்தார். கடன் சுமை தாங்க முடியாமல் வீட்டையும் விற்றுவிட்டோம்.

ஆனால் கடனை திருப்பி அடைக்க அந்த பணமும் போதவில்லை, வேறு எந்தவழியுமே இல்லாத நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என் கணவர்" என்ற பல்தேவ் கெளரின் வார்த்தைகள் மனதை நிலைகுலைய வைக்கின்றன.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

எட்டாயிரம் ரூபாய் ஆண்டுக் கூலி என்ற வார்த்தை என்னை நிலைகுலைய வைத்தது. அப்போது குடும்பத்தை நடத்த அவர்கள் என்ன செய்வார்கள்? அடிப்படை தேவைகளுக்கே கடன் வாங்க வேண்டியிருக்குமே என்ற எண்ணமும், அவர்களின் கடன் சுமையை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் மனதை அலைக்கழித்தன.

கணவனின் இறப்புக்கு பிறகு, மகனும் கூலி வேலைக்கே வந்துவிட்டான். "குடியிருக்க வீடு இல்லை, மழை பெய்தால் ஒழுகும் குடிசையில் நாங்கள் ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கிடப்போம். கடனை அடைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்பினால், சில வீடுகளில் வேலை பார்த்துவிட்டு, வயல்களுக்கு சென்றும் வேலை பார்ப்பேன். கடினமாக உழைத்தாலும், கடன் மட்டும் அடையவேயில்லை" என்று சொல்கிறார் பல்தேவ் கெளர்.

விவசாயம்
படக்குறிப்பு, பல்தேவ் கெளரின் கணவன் மற்றும் மகன்

கணவன் இறந்தபிறகு, 15 வயது மகனை, தங்களுக்கு கடன் கொடுத்த ஜமீன்தாரரிடம் கூலி வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

21 வயதில் மகனுக்கு திருமணம் செய்துவைத்தார் தாய். அவருக்கு மகன் பிறந்த நான்காவது மாதத்தில் மகன் குல்விந்தர் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டான்.

விவசாய கூலித் தொழிலாளியான பல்தேவின் குடும்பத்தில் இரண்டு ஆண்கள் கடன் சுமையால் தற்கொலை செய்துக் கொண்ட போதிலும், அரசின் நிதியுதவி எதுவும் கிடைக்கவில்லை.

கண்களில் வழியும் நீரை துடைத்துக் கொண்டே பேசும் பல்தேவ், "எங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பதை மகனிடம் நான் சொன்னதில்லை, ஆனால் அவன் அதைப் பற்றி கேட்டுக் கொண்டே இருப்பான். ஒரு நாள் கடனின் சுமையை அவன் தெரிந்துக் கொண்டபிறகு, இவ்வளவு கடனை எப்படி அடைப்பது என்று அதிர்ந்துபோனான். நான் அவனுக்கு தைரியம் சொன்னாலும், அவன் உள்ளுக்குள் உடைந்து போய்விட்டான்."

நீதிமன்றத்தில் முறையீடு

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு 'இழப்பீடு மற்றும் நிவாரணம்' வழங்கும் வகையில் 2015 ஆம் ஆண்டில், பஞ்சாப் மாநில அரசு புதிய கொள்கை ஒன்றை அமல்படுத்தியது. 2001 ல் இருந்து இந்த கொள்கை ஐந்து முறை மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி, தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் விகிதம் அதிகமாவதை கண்ட மாநில அரசு, இரண்டு குழுக்களை அமைத்தது. சுக்விந்தர் சிங் சர்காரியா தலைமையில் 'சட்டமன்றக் குழு' மற்றும் டி. ஹக்கின் தலைமையில் 'கடன் தள்ளுபடிக் குழு' அமைக்கப்பட்டன.

'தட்டில் இருந்து உணவு காணமல் போகும் நாள் வெகுதூரமில்லை…'

பட மூலாதாரம், Reuters

இந்தக் குழுக்கள் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு வழங்கப்படும் 'குறைந்தபட்ச ஆதரவு விலையை' உயர்த்த வேண்டும் என்பது முதல் 'கடன் தள்ளுபடி' செய்ய வேண்டும் என்பதுவரை பல்வேறு பரிந்துரைகளை வழங்கின. ஆனால் குழுக்களின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் மீதான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.

பஞ்சாப் விவசாய பல்கலைக்கழக பேராசிரியர் சுக்பால் சிங், மாநிலத்தில் அதிகரித்துவரும் விவசாய நெருக்கடி தொடர்பாக பணியாற்றி வருகிறார். மாநில அரசால் மேற்கொள்ளப்பட்ட விவசாயிகளின் வீட்டு வாசலுக்கே சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் தலைவராகவும் அவர் செயல்பட்டார். அவரிடம் பிபிசி நேரில் பேசியது.

விவசாயத்தில் உள்ள 'வணிக நிலைமைகள்' விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை என்று பேராசிரியர் சுக்பால் சிங் கூறுகிறார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 4
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 4

"விதைகள், உரங்கள், நீர், பூச்சிக் கொல்லிகள் என விவசாயத்திற்கான இடுபொருட்களின் செலவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், விவசாயிகளின் வருமானம் அதற்கேற்ப அதிகரிக்கவில்லை என்பதுதான், விவசாயிகளின் கடன் சுமையை அதிகரித்து. அவர்களை தற்கொலைக்கு தூண்டும் பிரதான காரணியாக இதுவே மாறுகிறது.

ஒரு காலத்தில் மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்தினர் விவசாயம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருந்த நிலைமை மாறி தற்போது 35 சதவீத மக்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடும் நிலைமை வந்துவிட்டது. இந்த 35 சதவீதத்தில் 20 சதவீதத்தினர் மட்டுமே விவசாயிகள், எஞ்சியவர்கள் விவசாய கூலித் தொழிலாளிகள்.

'தட்டில் இருந்து உணவு காணமல் போகும் நாள் வெகுதூரமில்லை…'

பட மூலாதாரம், Thinkstock

குர்தேஜ் தாஸ்

பர்னாலா மாவட்டம் பத்ரா கிராமத்தை சேர்ந்த குர்தேஜ் தாஸ் என்பவரை சந்தித்தோம். 45 வயது குர்தேஜ் தாஸின் குடும்பத்தில் பெண் உறுப்பினர்கள் யாருமே இல்லை.

கிராமத்தின் பிரதான சாலையில் உள்ள பாழடைந்த இல்லத்தில் வசிக்கும் இந்த விவசாய குடும்பத்திடம் ஒரு ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு நிலத்தை குத்தகைக்கு எடுத்த இந்த குடும்பம், விவசாயம் செய்து வந்தது. ஆனால் அதிகரித்து வந்த கடன் சுமையால், இவரது அண்ணன் நிர்மல் சிங் தற்கொலை செய்துகொண்ட பிறகு, குடும்பமே சிதைந்துவிட்டது.

மூத்த சகோதரரின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு குர்தேஜ் தாஸின் கடமையானது. இதன் பின்னணியிலும் ஒரு சோகக்கதை இருக்கிறது.

கிராம மக்கள் சேர்ந்து, நிர்மல் சிங்கின் மனைவியும் குர்தேஜ் தாஸின் அண்ணியுமான சரப்ஜித் கெளரை குர்தேஜ் தாஸுக்கு திருமணமும் செய்து வைத்துவிட்டார்கள்.

விவசாயம்
படக்குறிப்பு, குர்தேஜ் தாஸும் அவரது அண்ணன் மகனும்

இதை விரும்பாத சரப்ஜித், குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். தந்தை தற்கொலை செய்துக் கொள்ள, தாயும் பிரிந்து சென்றுவிட, குழந்தைகளை வளர்க்கும் சவாலான பொறுப்புடன் சேர்த்து கடன் சுமையும் குர்தேஜின் தோள்களில் விழுந்தது.

இந்த சவால்களை எதிர்கொள்ள பொருளாதார ரீதியாகவோ, மனோரீதியாகவோ குர்தாஸ் தயாராக இருக்கவில்லை.

தூசியும், புழுதியுடம் படிந்த வீட்டின் சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டே நம்மிடம் பேசினார் குர்தாஸ். "இந்த குழந்தைகளை விட்டு தாய் பிரிந்து சென்றபோது, சிறியவனுக்கு ஆறு வயதுதான். இரவு நேரங்களில் அம்மாவை நினைத்து அழுவான்.

ஏதோ என்னால் முடிந்த சமையலை செய்து குழந்தைகளின் பசியை போக்குவேன். அவர்களை குளிக்க வைப்பது, வீட்டு வேலைகளையும் செய்து பின்னர் வேலைக்கு செல்வேன்."

சகோதரின் இரு மகன்களும் இப்போது வளர்ந்துவிட்டார்கள். ஆனால் விவசாயத் தொழிலில் ஈடுபடுவதை குர்தேஜ் தாஸும் விரும்பவில்லை, அவர்களும் விரும்பவில்லை. "என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து இந்த பிள்ளைகளும் என்னைப் போலவே விவசாயத்தில் ஈடுபட்டு காலம் முழுவதும் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை என்று சொல்கிறார் குர்தாஸ்.

விவசாயத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக, எதாவது கடை வைத்தோ அல்லது தொழிற்சாலையில் கூலி வேலை செய்தோ பிழைத்துக் கொள்வதே மூன்று வேளை சாப்பிடுவதற்கு உதவும் என்று மனம் நொந்து சொல்கிறார் குர்தேஜ் தாஸ். விவசாயத்தில் வருமானம் கிடைக்கவில்லை என்பது மட்டுமா பிரச்சனை?

விவசாயத்தில் ஏற்படும் நட்டத்தாலும், ஒரு வேளை உணவாவது சாப்பிடுவதற்காக வாங்கும் கடனை திருப்பிச் செலுத்த முடியாமலும், மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டாலும், அது மட்டும் பிரச்சனையை தீர்த்து வைத்துவிடுகிறதா?

குடும்பத் தலைவர் தற்கொலை செய்துக் கொண்டால், எஞ்சியிருக்கும் மற்றவர்களின் நிலை இன்னும் மோசமாகிவிடுகிறது... இப்படிப்பட்ட அவலநிலைக்கு தள்ளும் விவசாயத் தொழிலில் இந்த பிள்ளைகளும் ஈடுபடவேண்டும் என்று நான் எப்படி நினைப்பேன் என்று குமுறுகிறார் குர்தேஜ் தாஸ்.

16, 000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?
படக்குறிப்பு, குர்தேஜ் தாஸ்

அம்மா, சாகவேண்டும் போல் தோன்றுகிறது...

பத்ரா கிராமத்தின் அருகில் இருக்கும் சங்க்ரூர் மாவட்டம் கோகர் குர்த் கிராமத்தில் 23 வயது இளம் விவசாயி தற்கொலை செய்துக் கொண்டதை கேள்விப்பட்டோம். கடன் சுமை, வங்கியிலிருந்து கடனை திருப்பிச் செலுத்த வந்த நோட்டீஸ் என நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்த நிம்ருத் பால், 2018 ஜூன் 14ஆம் தேதியன்று இரவு, ரயில் தண்டவாளத்தில் தலையைக் கொடுத்து தற்கொலை செய்துக் கொண்டார்.

இரண்டு குழந்தைகள், மனைவி, பெற்றோர் என தன்னை சார்ந்திருக்கும் குடும்பத்தினரை தவிக்கவிட்டு நிம்மதியைத் தேடி தன் உயிரை மாய்த்துக் கொண்டார் நிம்ருத் பால்.

16000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

எப்போதும் விரக்தியிலிருந்த அவர், பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறும்போது, செத்துவிடலாம் என்று தோன்றுவதாக தாயிடம் சொல்வாராம்! இரு பிஞ்சுக் குழந்தைகளும் தந்தை இறந்துவிட்டதை புரிந்துக் கொள்ளாமல் அப்பா, அப்பா என்று அப்பாவைத்தேடி அழுவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

மார்பில் அடித்துக் கொண்டு அழும் தாரத்தையும் தாயையும் பார்க்க கொடுமையாக இருக்கிறது என்றால், வயதான காலத்தில் தங்களுக்கு இருந்த ஒரே ஊன்றுகோலும் போய்விட்டதே என்று தந்தை கலங்கி நிற்கிறார்.

இதுபோன்ற துக்கமான பல நிகழ்வுகளை பார்த்து செய்வதறியாமல் திகைத்து போன நாங்கள், 'பாரதிய கிசான் யூனியன் ஏக்தா உக்ராஹன்' என்ற உள்ளூர் அமைப்பால் நடத்தபப்டும் போராட்டத்திற்குக் சென்று கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்தோம்.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நடவுக்கான காலவரையறையை (நடவு செய்வதற்கான இறுதி நாளை பஞ்சாப் மாநில அரசு நிர்ணயித்ததற்கு விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியது) எதிர்த்து, மஞ்சள் நிற கொடியை கையில் ஏந்திய விவசாயிகள், பர்னாலா நகருக்கு பேரணி நடத்தினார்கள்.

'தற்கொலை தீர்வல்ல, போராடுங்கள்'

பசுமைப் புரட்சி நடைபெற்ற நாட்டில் இன்று இத்தனை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன என்று அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் கேட்டேன்.

கையில் கொடி ஏந்திக் கொண்டு நின்றிருந்த வயது முதிர்ந்த விவசாயி பாரா சிங் எனது கேள்விக்கு பதிலளித்தார். "விதை, உர நிறுவனங்கள், பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றும் டிராக்டர் உற்பத்தி செய்த நிறுவனங்கள் தான் பசுமை புரட்சியால் பயனடைந்தன.

16, 000 விவசாயிகளின் தற்கொலைக்கு காரணம் பசுமை புரட்சியா?

அதிக விலையிலான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை எங்களை வாங்கச் செய்தவர்களும், டிராக்டர்களையும், வேறு உபகரணங்களையும் விற்பனை செய்தவர்களும் தான், எங்களை கொள்ளையடித்து கொள்ளை லாபம் ஈட்டினார்கள்.

டிராக்டர் வாங்கவும், அவர்களின் விலையுயர்ந்த விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கவும் தானே நாங்கள் கடன் வாங்கினோம்? அந்த கடன் சுமைதானே எங்களின் சுமையாக மாறியது? தற்கொலைக்கு காரணமானது? எங்களுக்கு என்ன கிடைத்தது என்பதற்கு சாட்சிதான் விவசாயிகளின் அவல நிலைமை..."

"பயிர் சாகுபடியை பூச்சிகள் பாதிக்கின்றன என்று பூச்சிமருந்து அடித்தால், பனி பெய்து பயிர்களை நாசமாக்குகிறது. அரசு விவசாயிகளுக்கு இழப்பீடும் கொடுப்பதில்லை, கடன் தள்ளுபடியும் செய்வதில்லை.

பஞ்சாப் மாநில விவசாயிகளின் பிரச்சனைகளை பெரிதாக எழுந்தால், அதை விசாரிக்க கமிட்டிகளை அமைப்பார்கள். அந்த கமிட்டிகள் பரிந்துரைகளை வழங்கினாலும், அதை அமல்படுத்தாமல் கிடப்பில் போட்டுவிடுவார்கள்".

YouTube பதிவை கடந்து செல்ல, 5
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 5

"அரசு நிர்ணயித்த அடிப்படை ஆதார விலையில் எங்கள் விளைபொருளை விற்பதற்கே போராட வேண்டியிருக்கும் நிலையில், விரக்தி உச்சகட்டம் அடையும் நிலையில், வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறோம். தற்கொலைதான் தீர்வா? எஞ்சியவர்களாவது தற்கொலை செய்துக்கொள்ளக்கூடாது என்றால் போராட்டம்தான் எங்கள் முன்னிருக்கும் ஒரே வழி" என்கிறார் அவர்.

ஜூலை 11ஆம் தேதியன்று ஒரு பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த சண்டிகர் உயர் நீதிமன்றம், பஞ்சாப் மாநில அரசின் இழப்பீடு மற்றும் நிவாரணக் கொள்கைக்கு கண்டனம் தெரிவித்தது.

விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிப்பதற்கான காரணங்களை விளக்கி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என பஞ்சாப் மாநில அரசை அறிவுறுத்திய சண்டிகர் உயர் நீதிமன்றம், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை தடுப்பதற்கான தொலைநோக்குப் பார்வையில் மாநில அரசு எது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்ற முக்கியமான கேள்வியையும் கேட்டிருக்கிறது.

விவசாயிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்காமல் மெளனம் காத்தாலும், நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு அமைதி காக்க முடியாதல்லவா? நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய பதிலை தயாரிக்கும் பணியில் பஞ்சாப் மாநில அரசு ஈடுபட்டிருந்தாலும், அந்த பதிலை கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது பஞ்சாப் மாநில விவசாயிகளே...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :