You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாஜ்பேயி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-இன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பேயி-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த மருத்துவமனை புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பேயி-யை பார்த்தார்.
93 வயதுடைய மூத்த பாஜக தலைவரான வாஜ்பேயி சிறுநீரகத் தொற்றுக்காகவும், வேறு சில உடல் கோளாறுகளுக்காகவும் கடந்த ஜூன் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மூன்று முறை பிரதமர் பதவியேற்றுள்ள வாஜ்பேயி, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.
பிற செய்திகள்:
- கேரளா: இடுப்பளவு வெள்ளத்திலும் வீட்டை விட்டு வெளியேற மனமில்லாத மக்கள்
- எகிப்து: 'மம்மி' செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து கண்டுபிடிப்பு
- இந்தியா- பாகிஸ்தான் மாணவர்கள் இடையே கடிதம் மூலம் துளிர்த்த நட்பு
- உடல் எடையை பாதிக்கும் 5 விஷயங்கள்
- கிரிக்கெட்: தொடரும் தோல்வி: 'பயிற்சியாளரை மாற்றுங்கள்' - ரசிகர்கள் போர்க்கொடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்