வாஜ்பேயி உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பேயி-இன் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பேயி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடல் பிஹாரி வாஜ்பேயி

உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் வாஜ்பேயி-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த மருத்துவமனை புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மோசமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி எய்ம்ஸ் மருத்துவமனை சென்று வாஜ்பேயி-யை பார்த்தார்.

93 வயதுடைய மூத்த பாஜக தலைவரான வாஜ்பேயி சிறுநீரகத் தொற்றுக்காகவும், வேறு சில உடல் கோளாறுகளுக்காகவும் கடந்த ஜூன் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மூன்று முறை பிரதமர் பதவியேற்றுள்ள வாஜ்பேயி, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பெற்றவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :