கருணாநிதி உடல் நலன் குறித்து விசாரிக்க ராகுல், ரஜினி மருத்துவமனை வருகை

தி.மு.க.தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிக்க அவர் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், நடிகர் ரஜினி காந்தும் செவ்வாய்க்கிழமை வந்திருந்தனர்.

கருணாநிதி

கருணாநிதியை அவர் நேரில் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நான் கருணாநிதியை பார்க்க விரும்பினேன். அவருக்கு ஆதரவைத் தெரிவிக்க விரும்பினேன். எங்களுக்குக் கருணாநிதியுடன் நீண்ட கால உறவு இருக்கிறது. ஆகவே அவரை நான் பார்க்க வந்திருக்கிறேன். அவர் நன்றாக குணமடைந்து வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவர் மிக உறுதியாக இருக்கிறார். உடல்நிலை சீராக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

விஜய்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற கருணாநிதியின் உடல்நலத்தை நடிகர் விஜய் நேரில் சென்று விசாரித்தார். புதன்கிழமை காலை மருத்துவமனை சென்ற நடிகர் விஜய், திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதய்நிதி உடனிருந்தார்.

இதைப் போலவே மருத்துவமனைக்கு வந்து உடல் நலம் விசாரித்துவிட்டுத் திரும்பும்போது பேசிய ரஜினிகாந்த் "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அழகிரி மற்றும் கனிமொழியிடம் விசாரித்தேன். அவர்களுக்கு ஆறுதல் கூறினேன்" என கருணாநிதியை பார்த்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருணாநிதி குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்

முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலையில் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவர் எந்தக் காரணத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அந்த பிரச்சனைகள் சரியாகிவிட்டன.

இருந்தபோதும் முதுமை காரணமாக அவரது உடல் நலத்தில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்டிருக்கும் பின்னடைவினாலும் கல்லீரலின் செயல்பாடு, ரத்த அணுக்களின் எண்ணிக்கையில் இருக்கும் மாறுபாடுகளாலும் அவர் இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

ரஜினி
Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைபெற்றுவந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்ததால் கடந்த 28ஆம் தேதி அதிகாலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையான காவிரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ரஜினி சந்திப்பு

தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்ட அவரது ரத்த அழுத்தப் பிரச்சனை சரிசெய்யப்பட்டது. அதற்குப் பிறகு, 29ஆம் தேதி மாலையில் திடீரென அவருக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டது. பிறகு மருந்தின் மூலமே அவரது உடல்நலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடலநலக் குறியீடுகள் சாதாரண நிலைக்கு வந்தன.

இந்த நிலையில், அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை நான்கு மணியளவில் சென்னை வந்தார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோருடன் காவிரி மருத்துவமனைக்குச் சென்ற அவர், கருணாநிதியை பார்த்தார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

அதற்குப் பிறகு மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோரைச் சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தொண்டர்கள்

கருணாநிதியை நேரில் பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "ஆமாம் அவரை நேரில் பார்த்தேன். தமிழக மக்களைப் போலவே அவர் மிகவும் உறுதியானவர். சோனியா தனது ஆதரவை அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கச் சொன்னார்" என்றும் ராகுல்காந்தி கூறினார்.

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

கருணாநிதி சிகிச்சைபெற்றுவரும் மருத்துவமனை முன்பாக இன்று நான்காவது நாளாக தொண்டர்கள் கூடியிருந்து "எழுந்து வா.. எழுந்து வா" என்ற முழக்கத்தை தொடர்ந்து எழுப்பிவருகின்றனர். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பதாகை ஒன்றில், கருணாநிதி நலம் பெற வாழ்த்தி, கையெழுத்திட்டும் வருகின்றனர்.

29ஆம் தேதி மாலைக்குப் பிறகு, கருணாநிதியின் உடல்நலம் குறித்து எந்த அறிக்கையும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள அறிக்கை மருத்துவமனை முன்பாக கூடியுள்ள அவரது தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :