"அதிமுகவின் வலு கடற்கரையில் கட்டிய மணல் கோட்டை, ஆதரவு கடல் அலை"
தங்கள் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் தொடங்கிவிட்டதாக மதுரையில் அறிவித்து இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக, அதிமுக கட்சியின் வலுவும், அதற்கான மக்கள் ஆதரவும் எப்படி உள்ளது? என்று பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டு இருந்தோம்.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கட்சியின் ஆளுமை மிகுந்த தலைவரது மறைவுக்குப் பின்பே துறைசார் அமைச்சர்கள் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்கின்றனர் என்பது வரவேற்கத்தக்கது. என்றாலும் ஆட்சியின் தொடக்கத்தில் முதல்வரது மருத்துவத்தில் மர்மம், கட்சித் தலைமை மற்றும் அமைச்சர் பதவிக்காக இரண்டு குழுக்களாக பிரிந்து அரங்கேற்றிய அரசியல் நாடகங்கள் எனத் தொடங்கி, மறைந்த கட்சித் தலைவரது அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிராக நடுவணரசின் திட்டங்களை நிறைவேற்றும் ஓர் ஒட்டுண்ணி அரசாகவே மாறி, மாநிலத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொள்ளாமல், மக்களின் உரிமை போராட்டங்களை உதாசீனம் செய்யும் வகையில் ஆட்சியைச் செய்து வருவதால் இவர்களது நலத்திட்டங்களை எவ்வகையில் விளம்பரம் செய்தாலும் அவை வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கான ஆதரவு வாக்குகளாக மாற்றுவது என்பது மிகவும் கடினம் என்று கருத்து தெரிவித்துள்ளார் சக்தி சரவணன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
தமிழ் செல்வன் என்ற நேயரோ "இதுதான் தமிழக முதல்வரா என்று மக்கள் ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் உள்ளனர்...! அம்மா அவர்களோடு கட்சியும் காணாமல் போய்விட்டது...!" என்கிறார்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"வலு கடற்கரையில் கட்டிய மணல் கோட்டையாகவும், ஆதரவு கடல் அலையாகவும் இருக்கிறது" என்பது மைதீன் ரிஃபாவின் கவித்துவமான கருத்து.
பெரும்பாலானவர்கள் பா.ஜ.கவினால் தன் செல்வாக்கை அதிமுக இழந்துவிட்டது என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
அதிமுக அதள பாதாளத்தில். இன்னும் சொல்லப் போனால், மரணப் படுக்கையில். சூடு கண்ட பூனைதான் மக்கள் நிலைமை. அமைச்சர்களுக்கும் இது நன்றாக தெரியும் என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













