கோவை கல்லூரி மாணவி பலி: "பேரிடியாக முடிந்த பேரிடர் பயிற்சி"
பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவையில் உள்ள கலைமகள் கல்லூரி மாணவி பலியாகியுள்ளார்.

பேரிடர் நேரங்களை சமாளிக்க பயிற்சி வழங்குவது யார் பொறுப்பு? அதில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பாக்கப்பட வேண்டியவர்கள் யார்? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேள்வி எழுப்பியிருந்தோம்.
இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்து வழங்குகின்றோம்.
சிவகுமார் என்பவர், இதற்கு முழு பொறுப்பு பயிற்சியாளரும், பயிற்சியாளரின் திறனை சோதிக்காத நிர்வாகமுமே. இது போன்ற உயிருக்கு உத்தரவாதமில்லாத பயிற்சி இனி எந்த கல்லூரியிலும் நடக்காமல் இருக்க இது காரணமாகிவிட்டது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஆர். எஸ். அருண் என்கிற நேயர், கல்லூரி சட்டங்களை முறையாக பின்பற்றியதா என்பது விசாரிக்கப்படுமா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
போலி நிறுவனங்களையும், போலி ஆட்களையும் களையெடுக்காத அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்குத்தான் அதிக பொறுப்பு உள்ளது. பேரிடர் பயிற்சி பேரிடியாக முடிந்தது என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
இதற்கு அரசே பொறுப்பு என்கிறார் ட்விட்டர் நேயர் மருதம் வேலன்.

பட மூலாதாரம், Twitter
கிஷோர் மோரிலஸ் என்ற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், வரி வாங்குவதில் காட்டும் ஆர்வத்தை மக்களுக்கு அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குவதில் காட்ட இந்திய நாடு தவறிவிட்டது. இதற்கு தொடர்புடைய துறை அமைச்சர் மேலும் வழக்கு பதிய வேண்டும் என்று எழுதியுள்ளார்.
நதி என்ற நேயர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், நிர்வாகம் சார்ந்தவர்களின் முட்டாள்தனமே இந்த மரணத்திற்கு காரணம் என்கிறார்.

பட மூலாதாரம், Twitter
ஸ்ரீவித்யா சோலைமலை என்னும் நேயர், தங்கள் பொறுப்பில் செயலைச் செய்ய வேண்டிய அனைவரது பொறுப்பின்மையும் இதற்குக் காரணம் என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












