பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் உலகில் எங்கு அதிகமாக நடைபெறுகிறது?

    • எழுதியவர், முகம்மது ஷாஹித்
    • பதவி, பிபிசி

'ரைசிங் காஷ்மீர்' (Rising Kashmir) இதழின் ஆசிரியர் சுஜாத் புஹாரி மற்றும் அவரது பாதுகாவலர் ஒருவர், ஜம்மு காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் வியாழக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் பத்திரிகையாளர்களின் இறப்புகள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்டால், மற்றொரு முக்கியமான கூற்றை மறுதலிக்க வேண்டியிருக்கும்.

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் சார்ந்த சர்வதேச பத்திரிகை நிறுவனம் (INTERNATION PRESS INSTITUTE), உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'டெத் வாட்ச்' என்ற இறப்பு பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதில், ஒவ்வொரு ஆண்டும் கொல்லப்பட்ட கொல்ல் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை வெளியிடப்படும்.

கடந்த ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி, மோதல் நடைபெறும் இடங்களில் ஏற்படும் இறப்புகளைவிட, ஊழல் தொடர்பான விசயங்களை வெளியிடும் பணியில் ஈடுபடும்போது அதிக மரணங்கள் ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டு ஆறு பெண்கள், இவர்களில் 87 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர், அதில் 46 பேர் ஊழல் தொடர்பான விஷயங்களில் விசாரணை மேற்கொண்டிருந்தவர்கள்.

2017இல் மட்டுமல்ல, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 32 செய்தியாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் எல்சால்வாடோரை சேர்ந்த ஒரு பெண் செய்தியாளரும் அடங்குவார். இந்த அறிக்கையின்படி, மாதந்தோறும் எட்டு மரணங்கள் ஏற்படுகின்றன.

ஊழல் காரணமாக கொலைகள்

மோதல்கள் நடைபெறும் இடங்களில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதற்கான காரணத்தை புரிந்துக் கொள்ளலாம். ஆனால் பத்திரிகையாளர்களின் உயிர்களை குடிப்பது ஊழல் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் சர்வதேச பத்திரிகை சம்மேளனத்தின் (IPI) செய்தித் தொடர்பாளர் ரவி பிரசாத், இதுபோன்ற மரணங்கள் ஏற்படும்போது, அவர்களது அமைப்பு சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நட்த்துவதாக கூறுகிறார். அதாவது சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் ஈடுபட்டிருந்த புலனாய்வு விஷயங்கள் பற்றி விசாரணை மேற்கொள்வார்கள்.

"இந்த கொலைகள் பத்திரிகையாளர்களை மட்டுமே கவலையடையச் செய்கின்றன. பிளாகுகளில் (BLOGGER) எழுதுபவர்கள் இந்த விசயத்தில் பாராமுகமாக இருக்கிறார்கள். இரண்டாவதாக, கொல்லப்பட்டவர்களின் பத்திரிகை நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் விசாரனை நடத்துகிறோம். கொல்லப்பட்டவர்கள் மேற்கொண்டிருந்த பணிகள், எதுபோன்ற ஊழல் பிரச்சனையை அவர் சேகரித்துக் கொண்டிருந்தார்" என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.

"ஒருவர் கொல்லப்படுவதற்கான காரணம், ஊழலைத் தவிர வேறு எதாவதாக இருக்கலாமா என்ற சாத்தியக்கூறுகளையும் ஆராய்வோம். இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர், அவர்கள் மூவருமே ஊழல் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்ததாக அவர்கள் பணியாற்றிய செய்தி நிறுவனத்தின் ஆசிரியர்கள் கூறினார்கள்" என்று ரவி மேலும் கூறுகிறார்.

"மால்டாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் பனாமா ஆவணக் கசிவு தொடர்பான விசயத்தை விசாரித்து வந்தார் என்பது உலகத்திற்கே தெரியும். அரசு அந்த கொலை வழக்கில் முக்கிய நடவடிக்கைகளை எதையும் எடுக்கவில்லை."

இந்தியாவின் பெங்களூருவில் கடந்த ஆண்டு, பெண் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டார். இதைப்பற்றி குறிப்பிடும் ரவி, கெளரி மிகவும் உத்வேகமான செய்தியாளர், ஊழல் முதல் இனவாதம் வரை பல்வேறு பிரச்சனைக்குரிய விசயங்களை தைரியமாக கையாள்பவர். அவரது கொலை விசாரணையும் மந்தமாகவே இருக்கிறது.

கொலை தொடர்பான விசாரணைகள் குறித்து சர்வதேச பத்திரிகை சம்மேளத்தின் அறிக்கையில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் நடைபெற்ற கொலை வழக்குகளில் விசாரணை மிகவும் மந்தமாக நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதியன்று ஸ்லோவாகியா பத்திரிகையாளர் ஜேன்குஸ்க் மற்றும் அவரது பெண் தோழியின் உடல் அவரது வீட்டில் கண்டறியப்பட்டது.

ஜேன்குஸ்க் அரசாங்கத்தில் நடைபெறும் ஊழல் பற்றி செய்தி வெளியிட்டார், அவர் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னர் ஸ்லோவாக்கிய பிரதமர் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அக்டோபர் 2017ஆம் தேதியன்று மால்டாவில் கார் ஒன்று வெடித்ததில் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் டெஃப்னி, மெக்சிகோவில் புலனாய்வு பத்திரிகையாளர் சேவியர் வால்தேஜ்கார்தேன்ஸ் மற்றும் கெளரி லங்கேஷ் ஆகியோரின் கொலை விசாரணைகளும் மந்தகதியில் நடத்தப்படுகிறது.

மோசமான படுகொலைகள் நடப்பது எங்கே?

ஐ.பி.ஐயின் அறிக்கையின்படி, லத்தீன் அமெரிக்காவில்தான் அதிக அளவிலான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர்.

அங்கு போதைப் பொருள் கடத்தல் மற்றும் அரசியல் ஊழல்கள் தொடர்பாக அதிக அளவிலான செய்திகள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

லத்தீன் அமெரிக்காவில் மாதம் ஒன்றுக்கு 12க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள், அதிலும் அதிகபட்ச கொலைகள் மைக்ஸியில் நடைபெறுகிறது.

பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது தெற்காசியாவிலும் நடைபெறாத ஒன்று அல்ல. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் ஏழு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஒரே ஒரு பத்திரிகையாளர் மட்டுமே கொல்லப்பட்டார்.

பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் ஆப்கானிஸ்தான்.

அங்கு பத்திரிகையாளர்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஒரு வெடிகுண்டு சம்பவத்தை பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது இலக்கு வைத்து தாக்குதல் நடத்தினர்.

1997 முதல் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவது தொடர்பாக ஐ.பி.ஐ பணியாற்றி வருகிறது. 1997ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 1801 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக டெத் வாட்ச் அறிக்கை கூறுகிறது. 2012ஆம் ஆண்டில் மட்டும் 133 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :