"ஸ்டெர்லைட் இல்லாத மாநிலங்களில் மின்சாரமே இல்லையா?"
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், தாமிரம் இல்லாமல் டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும் பணி பாதிப்பு உண்டாகியுள்ளதாக தமிழக சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், VEDANTA
"அமைச்சரின் இந்த கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதா? மாற்று ஏற்பாடுகள் செய்ய தமிழக அரசு தவறிவிட்டதா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"மீண்டும் ஆலையை திறக்க தயராகிரது தமிழக அரசு! காரணம்தான் சிறுபிள்ளை தனமாக இருக்கின்றது! காப்பர் ஆலை இல்லாத மாநிலங்கள் எப்படி டிரான்ஸ்ஃபார்மர் தயாரிக்கின்றார்கள்!? வேறு எங்கு காப்பர் கிடைக்கும் என்று அமைச்சருக்கு தெரியாது போலும்!" என்று கூறுகிறார் நிசார் அகமது எனும் ஃபேஸ்புக் நேயர்.
"இந்த ஒரே ஒரு தொழிற்சாலையை நம்பிதான் இந்தியா இருந்ததா என்ன? இது மக்களை முட்டாள் ஆக்கும் செயல்," என்கிறார் சங்கர் ஜெகநாதன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"மக்களை பாதிக்கக் கூடிய விஷயங்கள் எதுவாக இருந்தாலும் வேண்டாம் ஏனென்றால் விவசாயம் இல்லாமல் நாம் ஒன்றும் செய்ய முடியாது காப்பர் இல்லை என்றால் வேறொன்றை தயாரிக்கலாம் மாற்று வழிகள் உண்டு. ஆனால் உணவிற்கும் நல்ல காற்றை சுவாசிக்க முடியாது. நம் நாட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்," என்று பதிவிட்டுள்ளார் மணி எனும் நேயர்.

"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன் எப்படி காப்பர் தயாரித்தீர்களோ அப்படியே தயாரியுங்கள்," என்பது அப்துல் அஜீஸ் எனும் நேயரின் கருத்து.
நித்தியானந்தம் இவ்வாறு கேள்வி எழுப்புகிறார்," ஏன் இந்தியாவில் எத்தனையோ பொருட்கள் இறக்குமதி் செய்யப்படுகிறது. அதில் ஒரு பொருளாக காப்பரையும் சேர்த்து இறக்குமதி செய்ய வேண்டியதுதானே?"
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"நாம் குப்பை போடாவிட்டால் துப்புரவாளர் வேலைகிடைக்காமல் பட்டினியில் இறந்து விடுவார் என்பது போல் இருக்கிறது. ஏற்றுமதியை நிறுத்தினால் போதும்," என்று கூறியுள்ளார் சண்முகம் எனும் ஃபேஸ்புக் பதிவர்.
"அப்ப ஸ்டெர்லைட் இல்லாத மாநிலங்களில் மின்சாரமே இல்லையா?" எனக் கேட்கிறார் ஜெகதீஸ்வரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












