தூத்துக்குடி: ஓரிரு நாளில் மாநில மனித உரிமை ஆணையத்திடம் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடி: ஓரிரு நாளில் ஆணையத்திடம் விசாரனை அறிக்கை ஒப்படைக்கப்படும்

தூத்துக்குடியில் கலவரம் நடந்த ஆட்சியர் அலுவலகம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதிகளில், மத்திய மற்றும் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் உள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன்,சித்தரஞ்சன்,மோகன்தாஸ் ஆகியோர் மே 2ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

ஆட்சியர் அலுவலக வாயிலில் கல்வீச்சால் சேதமான இடங்கள், இரண்டு சக்கர வாகன நிறுத்தத்தில் ஏற்பட்ட சேதம், கல்வீச்சில் சேதமான அரசு வாகனங்கள், தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்பு ஆகியவற்றை அக்குழுவினர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி: ஓரிரு நாளில் ஆணையத்திடம் விசாரனை அறிக்கை ஒப்படைக்கப்படும்

அதை முடித்த பின் விவிடி சிக்னல் பகுதியில் உள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்த மனித உரிமை குழு, துப்பாக்கிசூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரிடம் அன்றைய தினம் நடைபெற்றதை கேட்டறிந்தனர்.

பின்னர் பேசிய ஜெயச்சந்திரன், "நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை ஓரிரு நாட்களில் மாநில மனித உரிமை ஆணைய தலைவரிடம் ஒப்படைக்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும் இன்று மாலை தூத்துக்குடிக்கு வருகை தந்த பிரசாத், ராஜ்வீர், நிதின் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையக்குழுவினர், முதல் கட்டமாக தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். நாளை காலை பத்து மணியளவில் சம்பந்தப்பட்ட இடங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களிடம் விசாரணை தொடங்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: