வாதம் விவாதம் '''புரிதல் இல்லாமல் பேசியுள்ளார் ரஜினி; போராடாமல் எதுவும் கிடைத்துவிடவில்லை''

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த்

பட மூலாதாரம், SUJIT JAISWAL

ஆளும் கட்சிகளின் ஊதுகுழல் போல செயல்படுகிறார் என்ற விமர்சனங்களை உறுதி செய்யும் வகையில் ரஜினியின் பேச்சு அமைந்திருக்கிறதா? அல்லது மக்களின் உணர்வுகளை அவர் புரிந்துகொள்ளவில்லையா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.

இதற்கு வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

''மக்களின் உணர்வுகளை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. நல்லது செய்வேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தப்பின் மக்கள் விரோத சட்டங்களையும் திட்டங்களையும் கொள்கைகளையும் செயல்படுத்தும் ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் செய்யும் அடக்குமுறைகளுக்கும் எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராடதான் வேண்டியுள்ளது. அனைவருக்கும் பலன் அளிக்க கூடிய வகையில் பல தொழிற்சாலைகள் தமிழகத்தில் செயல்படுகின்றன அதற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள் தமிழக மக்கள் .மக்களை போராட்டகளத்திற்கு அழைத்து வருவது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தான்'' என்கிறார் நெல்லை டி முத்து செல்வம் எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

''இந்திய சுதந்திரம் கிடைத்தது போராட்டத்தினால், மொழிவாரி மாநிலம் அமைந்தது போராட்டத்தினால், பல சட்டங்கள் இயற்றபட்டது போராட்டத்தினால் ரஜினிக்கு இன்னும் பயிற்சி தேவை'' என்கிறார் கோமான் முகம்மது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''தமிழ்நாடு சுடுகாடு ஆகாமல் இருக்க தான் தலைவரே போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியவாய்ப்பில்லை'' என்கிறார் பால குமாரன்

'' நிகழ்வின் புரிதல் இல்லாமல் அதிகார வர்க்கம் சொன்னதை பேசியிருக்கிறார். இவரை ஏமாற்றுவது எளிது'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வசந்த்ராஜ்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

''அரசியலின் அடிச்சுவடி ஏழை மக்களின் மனோநிலை தமிழ் மக்களின் உணர்வு தெரியாத பேச்சு'' என்கிறார் குணசீலன்.

''மிக தைரியமான ஒரு உண்மை கருத்து'' என எழுதியுள்ளார் காளீஸ்வரன்.

''போராட்டத்தின் முடிவு வன்முறையாகத்தான் இருக்கும் என்பதை நன்றாக புரிந்து கொண்டதால் தான் இது போன்ற போராட்டங்கள் வேண்டாம் என்கிறார். போராட்டத்தில் இறந்து போனவர்களின் குடும்பத்தின் இழப்பை உங்களால் ஈடு செய்ய முடியுமா. போன உயிர் திரும்ப வருமா?'' என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் அகிலன்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

''மறைமுகமா மிரட்டுற மாதிரி இருக்கு. தமிழ்நாடே சுடுகாடாயிடும்னு சொல்றது சர்வாதிகார பேச்சு'' என குறிப்பிட்டுள்ளார் பார்த்தி தமிழன்.

''வரலாற்றை திருப்பி பார்க்க சொல்லுங்கள் போராடாமல் இங்கு எதுவும் கிடைத்துவிடவில்லை'' என்கிறார் மதன்

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

''எங்குபார்த்தாலும் பிரச்சனை இருக்குகின்றது,அதானால்தான் மக்கள் போராடுகின்றனர்.கட்சி ஆரம்பிக்கும் முன்பே போராட்டத்தை எதிர்த்தால் எப்படி? ஆளுங்கட்சி நல்லதே செய்தாலும் எதிர்த்து போராடினால்தான் எதிர்க்கட்சிக்கு அடுத்தமுறை வெற்றிவாய்ப்பு கிடைக்கும்! அரசியலும் அதே!'' என எழுதியுள்ளார் அஜித் அதிதேவ்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

'' ரஜினி சொல்வது சரி. எதற்கெடுத்தாலும் போராடுவது மாநிலத்தில் அசாதார சூழ்நிலையை உருவாக்கும். பிரித்தாள்வது எளிதானது. நாம் போராடலாம் ஆனால் சட்டத்தை கையில் எடுப்பது மக்காளாட்சிக்கும் அமைதிக்கும் உகந்ததல்ல'' என எழுதியுள்ளார் ராமசந்திரன் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: