You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காவிரி: ''தண்ணீர் தரவில்லை என்றால் மின்சாரம் இல்லை''
தமிழகத்துக்கு கொடுக்கும் அளவிற்கு கர்நாடகத்தில் தண்ணீர் இல்லை என்றார் குமாரசாமி. இது தொடர்பாக பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் காவிரி நீர் அரசியல் முடிவுக்கு வராதா? உண்மை நிலவரத்தைத்தான் குமாரசாமி சொல்கிறாரா? என்று கேட்டு இருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
சக்தி சரவணனின் கருத்து: "கர்நாடகத்தில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் காவிரியின் நிலைப்பாட்டில் ஒத்த கருத்துடையோராக செயல்படுவதும், தமிழ்நாட்டில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சிகளைக் குறைகள் கூறி காவிரியின் உரிமைகளைப் பெறுவதற்கு ஒன்றிணைந்து செயல்படாமல் இருப்பதும், நடுவண் அரசு தவறாமல் தமிழகத்தின் வளங்களை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளுக்கு தகுந்தவாறு செயல்படுவதுமாக காவிரி தமிழகத்தின் தீராத தாகமாக தொடர்வதற்கு மக்கள் எழுச்சி போராட்டங்களின் மூலமாக மட்டுமே நிலையான தீர்வு காணமுடியும்."
"எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்ணீர் வராது என்பது தான் உண்மை. இதற்கு முக்கிய காரணம் பெங்களூர் நகர தொழிற்சாலைகள். இரண்டாவது காரணம் மாண்டியா குடிநீர் பிரச்சனை,மூன்றாவது அரசியல் ,நான்காவது அரிசி தஞ்சை பொன்னி அரிசி கர்நாடகா பொன்னிக்கு கடும் சவாலாக இருக்கிறது. ஆகவே முடிந்த வரை தஞ்சாவூர் விளையாமல் பார்த்துக்கொள்கின்றனர். மத்திய அரசின் கனிமவேட்டைக்கு இடைஞ்சலாக இருக்கும் இந்த காவிரி நீரை முடிந்த அளவு தமிழ்நாட்டு பக்கம் வராமல் பார்த்துக்கொள்கின்றனர். அணைக்கு தண்ணீர் வர வேண்டும் என்றால் தண்ணீர் உற்பத்தியாகும் இடங்களிலும், காவேரி வரும் இடங்களிலும் உள்ள உறை கிணறுகளில் நீர் எடுப்பதை கட்டுபடுத்த வேண்டும். உறைகிணறுகளையும், தண்ணீர் மோட்டார்களையும் வைத்து தண்ணீரை கொள்ளையடித்து விட்டு அணையில் தண்ணீர் இல்லை என்று கதை அளந்தால் நம்ப தமிழக மக்கள் ஒன்றும் முட்டாள் கிடையாது." என்கிறார் நெல்லை டி. முத்துச்செல்வன்.
சரோஜா பாலசுப்பிரமணியன், "காவிரி நீரை அரசியல்வாதிகள் அரசியலாக்காத வரை நீர் தமிழ் நாட்டுக்கு வராது. இரண்டு மாநில அரசியல்வாதிகளையும் ஒதுக்கி விட்டு விவசாயிகளையும் சந்திக்க வைத்தால் பிரச்சனை தீரும்."
``மக்கள் செல்வாக்கு இல்லாத, காவிரியை தமிழகத்திற்கு தர கடுமையாக எதிர்த்த ஒருவரை முதல்வராக்கி உள்ளது காங்கிரஸ். இவர் வேறு என்ன சொல்வா``ர் என்கிறார் தமிழ் செல்வன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்