"கர்நாடகாவில் பாஜகவுக்கு அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து": ரஜினி

பட மூலாதாரம், GETTY IMAGES
கர்நாடகா தேர்தல் விவகாரத்தில், பா.ஜ.க ஆட்சியமைக்க அவர்களுக்கு ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் வழங்கியது கேலிக்கூத்து என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் கூட்டம், சென்னையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. 1 மணி நேரம் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் நகரம், ஒன்றியம், மாநகரம் ஆகியவற்றிற்கு மகளிர் நிர்வாகிகளை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெண்கள் இருக்கும் பக்கத்தில் வெற்றியிருக்கும் என்று கூறினார். மேலும், ரஜினி மக்கள் மன்றத்திலும், தான் தொடங்கவிருக்கும் கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்ற விஷயத்தை முன்னெடுத்தால் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி, தான் இன்னும் கட்சி தொடங்கவே இல்லை என்றும், அதற்கு முன் கூட்டணி பற்றி பேச முடியாது என்றும் கூறினார்.
காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட ரஜினி, அதற்கான முழு அதிகாரமும் ஆணையத்திடமே இருக்க வேண்டும் என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








