You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
#வாதம்விவாதம்: நதிகள் இணைப்பு - ஆபத்தை உணராமல் பேசுகிறாரா ரஜினி?
என் வாழ்க்கையின் ஒரே கனவு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் என்று காலா இசை வெளியீட்டுவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
"இது காவிரிப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முயற்சியா அல்லது கர்நாடகத்தை நேரடியாக எதிர்க்க தயக்கமா?" என்று பிபிசி தமிழின் #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"அணைகள் ஆபத்தானது அதைவிட ஆபத்தானது நதிகளை இணைப்பது. தடுப்பணைகளை கட்டலாம் அது நீரின் வேகத்தை குறைக்கும். நதியின் இருபுறமும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். சுற்றுசூழலுக்கு ஆபத்தும் இல்லை. கிராமங்களும் நீரில் மூழ்காது. தடுப்பணைகள் உடைந்தாலும் அழிவின் அளவு குறைவு. அணைகள் உடைந்தால் பேராபத்து. எந்த அணைக்கும் ஆயுள் என்று ஒன்று உண்டு. அதை உணராமல் இப்படி அறிக்கை விடுவதும் மிஸ்ட் கால் கொடுக்க சொல்லுவதும் மக்களை முட்டாளாக்குவதும் ஒன்றே," என்கிறார் கிருஷ்ண குமார் எனும் நேயர்.
பாதுஷா ஷா எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயர், " நதிகள் இணைப்பு சாத்தியம் இல்லாத ஒன்று. அவர் படத்தில் இணைப்பது போன்று இணைத்து விடலாம் என்று படக்காட்சியை வைத்து பிலிம் காட்டுகிறார்," என்று கூறியுள்ளார்.
நதிகள் இணைப்பு இயற்க்கைக்கு எதிரான நடவடிக்கை யார் செய்தாலும் தவறு தான் என்பது கற்றது அரசியல் எனும் பெயரில் ட்விட்டரில் பதிவிடும் நேயரின் கருத்து.
"அது அவரின் கனவாக மட்டுமேதானிருக்கும் அவரும் அரசியலுக்கு வந்தாலும் அது நிஜமாகாது அதைவைத்துதான் நம்மை சுற்றியுள்ள மாநிலங்களும் நமது மாநிலமும் அரசியல் செய்கிறது என்பது யாருக்கும் தெரியாமலில்லை இவரால் தாய்மண்ணை கண்டிப்பாக எதிர்க்க முடியாது," என்று நெல்லை தமிழா எனும் பெயரில் ட்விட்டரில் பதிவிடும் நேயர் கூறுகிறார்.
"தற்போதைய அரசியலை அவருக்கு பிடிக்கவில்லை, பிஜேபியையும் சேர்த்து. ஆனால் என்ன செய்ய தைரியம்தான் இல்லை. அதனால்தான் இப்படிப்பட்ட எதற்கும் உதவாத கருத்துகளை உதிர்கிறார், " என்பது மனோகர் தமிழ் எனும் ஃபேஸ்புக் பதிவரின் கருத்து.
"1947 பிறகு எவ்வளவோ பேர் சொல்லியாயிற்று. அதில் இவரும் ஒருவர்," என்கிறார் துரை.
"நதிகள் இணைப்பு" என்ற இந்த வார்த்தைக்கு " ஊழல் ஒழிப்பு " என்ற வார்த்தையைப்போல் சிறப்பான அரசியல் எதிர்காலம் உண்டு என்கிறார் வீர சோழன் எனும் ட்விட்டர் நேயர்.
"கண்டிப்பாக கர்நாடக மக்களைக் கோபப் படுத்தாமல் தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றி ஒரு நீண்ட அரசியல் பயணம் நடத்த திட்டமிட்டுள்ளனர்," என்பது ராஜகுமார் குமார் எனும் பெயரில் ஃபேஸ்புக்கில் பதிவிடும் நேயரின் கருத்து.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்