இரான் குழுவுக்கு நிதியளித்தவர்கள் மீது அமெரிக்கா தடை

இரானின் பலம்பொருந்திய புரட்சி காவல்படையுடன் (ஐஆர்ஜிசி) தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படும் 6நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகள் விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க கருவூல செயலரான ஸ்டீவன் மனுஷியன் கூறுகையில், ஐஆர்ஜிசி குழுவின் தவறான செயல்பாட்டுக்கு உதவும் வகையில் பல மில்லியன் டாலர்களை அளித்துள்ளவர்களை இந்த புதிய தடைகள் குறிவைத்துள்ளதாக தெரிவித்தார்.

அமெரிக்க டாலர்களை பெறுவதற்கு இரானின் ஐஆர்ஜிசி குழுவுக்கு உதவியதாக இரானின் மத்திய வங்கி மீதும் ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

தடைவிதிக்கப்பட்ட நபர்களின் பெயர்களை அமெரிக்க கருவூலத்துறை வெளியிடவில்லை. ஆனால், தடைவிதிக்கப்பட்ட அனைவரும் இரானியர்கள்தான் என்று அத்துறை மேலும் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்து எடுக்கப்படும் இந்த தடை நடவடிக்கை அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் தடைவிதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களோடு வணிகம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: