நீட்: உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்களா தமிழக மாணவர்கள்?

தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான் உள்பட வட மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை நியாயப்படுத்துகிறதா? என வாதம் விவாதம் பகுதியில் பிபிசி தமிழ் வாசகர்களிடம் கேட்டிருந்தோம். இதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

மாணவி

பட மூலாதாரம், Leon Neal

படக்குறிப்பு, இந்தப் புகைப்படம் இந்தியாவில் எடுக்கப்பட்டது அல்ல

''ஆமாம் வஞ்சிக்கப்படுகிறது தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.. கடும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை சரி இனி பஸ்ஸில் பயணம் செய்ய முடியது அரசு சார்பில் விமான சேவையில் அழைத்து செல்ல வேண்டும் இது தான் இப்போதைய தீர்வு சென்ற வருடம் உளவியல் ரீதியில் துன்புறித்தினர் அதே பாணியையே இப்போதும் தொடர்கின்றனர்'' என எழுதியுள்ளார் சுரேஷ்.

Balan sakthi/twitter

பட மூலாதாரம், Twitter

''நீட் எங்களுக்கு தேவையில்லை.ஆனால் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேர்வை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்'' என்கிறார் சிவா தேவி ரஜினி.

Twitter Screenshot

பட மூலாதாரம், Twitter

''தொலைதூரம் செல்லும் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களின்பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?'' என கேட்டுள்ளார் நவராஜன் ராஜன்.

வாதம் விவாதம்

தமிழ் மாறன் ராஜா ராம் என்ற நேயர் ''இந்தியாவில் அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட தமிழகத்தின் மாணவர்களை இவ்வாறு பிற மாநிலத்திற்கு அலைகழிப்பது நிச்சயம் திட்டமிட்ட செயல்.'' என பதிவிட்டுள்ளார்.

Twitter Screenshot

பட மூலாதாரம், Twitter

''தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு வேதனையளிக்கிறது'' என பேஸ்புக்கில் எழுதியுள்ளார் புஷ்பராஜ்.

''கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்'' என்கிறார் வாணிகணபதி ராஜன் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: