இனி தமிழ் மொழியிலும் ரயில் டிக்கெட்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் இடம்பெறவில்லை என்ற குறை இருந்துவந்த நிலையில், இன்று முதல் ரயில் டிக்கெட்டுகள் தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் உள்ள பயண விவரங்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியிலே அச்சிடப்பட்டு வந்தன.
இதனால் தமிழ் மொழி மட்டும் அறிந்த பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இனி முன்பு பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளில் உள்ள பயண விவரங்கள் தமிழ் மற்றும் மலையாள மொழிகளும் இடம் பெறும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முதலில், சென்னை சென்ரல், திருச்சி, சேலம், மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே இது அமலுக்கு வந்துள்ளது. விரையில் மற்ற ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும் எனவும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
கேரளாவில், திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 4 ரயில் நிலையங்களில் மலையாள மொழியிலும் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.
ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியிலும், ஆந்திராவில் தெலுங்கு மொழியிலும் ரயில் டிக்கெட்டுகள் அச்சிட்டு வழங்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












