குஜராத் கலவரம்: முன்னாள் பாஜக அமைச்சர் விடுதலை
கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த நரோடா பாட்யா கலவர வழக்கில் இருந்து முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி குஜராத் மாநில உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பட மூலாதாரம், AFP
சம்பவம் நடைபெற்றபோது, தனது காரில் இருந்து இறங்கி மாயா கோட்னானி மக்களை தூண்டிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதனை பார்த்த எந்த சாட்சியையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக சாட்சியம் அளித்த 11 பேரில், யாரின் சாட்சிய அறிக்கையையும் நம்பத்தகுந்தது அல்ல என்று நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.
பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு முன்னர் கீழமை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரின் தண்டனை காலத்தை 21 ஆண்டுகளாக உயர்நீதிமன்றம் குறைத்துள்ளது.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக மாயா கோட்னானிக்கு கீழமை நீதிமன்றத்தால் 28 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்யா பகுதியில் 2002-ஆம்ஆண்டு மிக மோசமான கலவரம் நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக 62 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதில் 29 பேர் சாட்சியங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
பிற செய்திகள்:
- #தமிழ்தேசியம்: சம்ஸ்கிருத எதிர்ப்பில்தான் வாழ்கிறதா தமிழ்த் தேசியம்?
- எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு
- இந்தியாவில் மீண்டும் ரூபாய் நோட்டுத் தட்டுப்பாடு வந்துவிட்டதா?
- நிர்மலா தேவி விவகாரம்: சிபிசிஐடி தலைவர் மாற்றப்பட்டது ஏன்?
- காமன்வெல்த் உச்சிமாநாடு: தலைவராக இளவரசர் சார்லஸை நியமிக்க ராணி கோரிக்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












