You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஸ்கீம்' என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல - உச்சநீதிமன்றம்
`ஸ்கீம்` என்பது காவிரி மேலாண்மை வாரியம் மட்டும் அடங்கியது அல்ல என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பை அமல்படுத்த தவறியது தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு மீது தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனடியாக எடுத்து கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் உமாபதி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று கோரிக்கை வைத்தார்.
அப்போது தலைமை நீதிபதி, தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ’ஸ்கீம்’ என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? என்று வழக்கறிஞர் உமாபதியிடம் கேட்டார்.
அதற்கு பதலிளித்த உமாபதி நாங்கள் அவ்வாறுதான் கருதுகிறோம் என்று தெரிவித்தார்.
அதற்கு தலைமை நீதிபதி `ஸ்கீம்` என்ற வார்த்தை காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டும் உள்ளடக்கியது அல்ல என்று தெளிப்படுத்தினார். இதன்மூலம் `ஸ்கீம்` என்ற வார்த்தையில் காவிரி மேலாண்மை வாரியமும் அடங்கும் என்று தெளிவாகிறது.
மேலும் தலைமை நீதிபதி குறிப்பிடுகையில் தமிழ்நாட்டின் தண்ணீர் தேவைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் தீர்ப்பு வழங்கினோம். இந்த பிரச்சனையின் தீவிரத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம். தமிழக நலனை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்று தெரிவித்தார்.
தமிழகத்துக்கு போதிய தண்ணீர் கிடைப்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த பிரச்சனையில் மேலும் பல அம்சங்களை ஆராய வேண்டியிருப்பதால் உங்களுடைய கோரிக்கை தொடர்பான விசாரணை ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- காவிரி விவகாரம்: அதிமுக எம்பி முத்துக்கருப்பன் ராஜிநாமா அறிவிப்பு!
- வளிமண்டலத்துக்குள் நுழைந்த சீன விண்வெளி நிலையம் - தென் பசிஃபிக் பகுதியில் விழும்
- அமெரிக்க பொருட்களுக்கு சீனா 3பில்லியன் டாலர்கள் வரி
- 'பூப்படைதல் நிகழ்ச்சி' சிறுமிகளுக்கு பிடித்துள்ளதா? #BBCShe
- பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் #BBCStreetCricket
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்