ஸ்ரீதேவிக்கு அஞ்சலி: மும்பையில் கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் (புகைப்படத் தொகுப்பு)

நடிகை ஸ்ரீதேவி துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது கடந்த சனிக்கிழமையன்று குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல், நடிகர் சங்கத் தலைவர் நாசர், லதா ரஜினிகாந்த் ஆகியோர் மும்பையில் உள்ள அனில் கபூரின் இல்லத்திற்கு சென்றனர்.

போனி கபூர் மற்றும் அவரது உறவினர்கள் பெரும்பாலனவர்கள் துபாயில் உள்ளதால் அவரது சகோதரர் அனில் கபூர் இல்லத்திற்கு சென்று பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும், பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், தபு, போன்ற பலரும் அவரது இல்லத்திற்கு சென்று இரங்கல் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :