You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாதம் விவாதம்: கமல் கட்சியின் கொள்கை தீர்வு தருமா? - மக்கள் கருத்து
கமல் ஹாசன் கட்சியின் கொள்கைகள் மக்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமையுமா? இவரது கட்சிக் கொள்கைகளால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி நேயர்கள் அளித்த பதிலை தொகுத்து வழங்கி உள்ளோம்.
ரமேஷ் கோவிந்ராஜ், " கொள்கை எனும் ஒன்று காகிதத்தில் மட்டுமே இதுவரை இருந்தது. பழைய கட்சிகளின் கொள்கைகளால் மக்கள் பயனடையவில்லை மாறாக மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே பயனடைந்தனர். கொள்கையினும் மேலான ஒன்று செயல். இனி அவர் செய்யப்போகும் செயல் நல்ல மாற்றத்தை தருமாயின் கொள்கை எனும் ஏட்டின் பக்கங்கள் அவசியமற்றது."
தனியாரிடம் இருக்கும் கல்வியை அரசுடைமையாக்கி தரமான தாய்மொழி வழியில் தனித்திறன் மேம்பாட்டுக் கல்விமுறைக்கு வழி வகுப்பது, கடைக்கோடி கிராமமும் மின்சாரம் பெற்று முன்னோடியாகத் திகழும் தமிழகத்திற்கு இயற்கை சூழல் கெடாமல் தடையில்லா மின்சார உற்பத்திக்கு வழி வகுப்பது போன்ற தொலைநோக்கு கொள்கைகள்தான் தேவைப்படுகிறது. எத்தகைய நலத்திட்டங்கள், நல்ல கொள்கைகள் ஆயினும் மாநிலங்களுக்கான உரிமைகள் மற்றும் வருவாய்களைக் கூட்டுவதற்கான வழிமுறைகள் இல்லையெனில் வெற்று அறிக்கைகளாகவே காற்றில் கரைந்து போகும் என்கிறார் சக்தி சரவணன்.
துரை முத்துசெல்வம், "மக்கள் இப்போதைக்கு என்ன தேவையோ அதை தருவதுதான் எனது கொள்கையென்று அவர் அப்துல்கலாம் அண்ணணை சந்தித்த பிறகு கூறினார் இதை செயல்படுத்தினாலே போதும் அவருக்கு அரசியலில் தனி இடம் உருவாகும். மக்களின் தற்போதைய தேவையென்ன உணர்ந்து அதற்கு ஏற்ப திட்டங்களை இவரின் கொள்கைகள்உருவாக்குமேயானால் நிச்சயம் வாக்களிப்பார்கள் . சட்டபேரவை தேர்தலுக்கு நாட்கள் இன்னும் நிற்கிறது அதுவரை மக்கள் பிரச்சனைகளை எப்படி அணுகிறார்கள் என பார்க்கலாம்".
"எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் மக்கள். இருண்ட வானத்தில் ஒளிக்கீற்று போல, வெற்றிடத்தை நிரப்ப வந்த தலைவராகத்தான் கமலை மக்கள் பார்க்கிறார்கள். அதை நிறைவேற்றுவாரா கமல் என்பது போகப் போகத்தான் தெரியும்," என்கிறார் சரோஜா பாலசுப்பிரமணியன்.
புலிவலம் பாட்ஷா : "கொள்கைகளை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது மக்கள் பிரச்சனைகளுக்கும் போராடவேண்டும்" என்கிறார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்