You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
“மக்களுக்காக வீதியில் இறங்கி கமல் போராடியுள்ளாரா?”
தொழிலுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை; நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கமல் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதற்கு புகழ் தேவைப்படுகிறதா? திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கு மக்களின் ஆதரவு எளிதில் கிடைத்துவிடுகிறதா?
இந்த கேள்விக்கு பிபிசியின் வாதம் விவாதம் பகுதியில் நேயர்கள் அளித்த பதிலகளை தொகுத்து வழங்குகின்றோம்.
சரோஜா சுப்பிரமணியன் என்கிற நேயர் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதிய பதிவில், “திரைதுறைப் புகழ் ஒரு துருப்பு சீட்டுதானே தவிர, அதை பற்றிக்கொண்டு வெற்றி பெற்றவர் வெகு சிலரே. புகழும் விளம்பரமும் அரசியல் ஏணியில் ஏற்றிவிடுமே ஒழிய உச்சிக்குப் போவது அவரவர் சாமர்த்தியம். உண்மை, நேர்மை, உழைப்பு இதில் தொடர்ந்திருக்க உதவும்.
டுவிட்டர் பதிவிட்டுள்ள கா.விஜேயேந்திரமணி, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ் நாட்டின் சாபக்கேடு என்கிறார்.
துரை முத்துசெல்வம் என்கிற நேயர் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவில், “நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கும் வழக்கம் தமிழ்நாட்டில் கிடையாது. நல்ல கொள்கை , தொலைநோக்கு திட்டங்கள், பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் போன்றவர்களைதான் இனி தமிழ்நாட்டில் ஆட்சி பீடங்களில் அமர வைப்பார்கள் மக்கள்” என்கிறார்.
சாந்தகுமாா் என்கிற நேயர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், எந்த தொழில் செய்பவரும் அரசியலுக்கு வரலாம் என்று எழுதியுள்ளார்.
சக்தி சரவணன் என்ற நேயரோ, “மூவேந்தர், சிற்றரசர் ஆட்சிக் காலத்தில் புலவரும், கலைஞரும், கணியரும் மன்னனது ஆட்சிமுறையை விமர்சித்ததுண்டு ஆனால் நாடாண்டதில்லை. மாறாக, மன்னன் புலவனாகவும், கலைஞராகவும் இருந்தனர் என்கிறது வரலாறு.
ஒருவர் தன்னுடைய துறையில் சாதித்த திறமைக்குரிய புகழையோ, செல்வத்தையோ முன்னிலைப்படுத்தி மற்றொரு இலக்கிற்கு முகவரி தேடுவதென்பது முடிவில்லா தொடர்கதை போன்றது.
திரைத் துறையினரது சிறு செயலும் சமூகத்தில் ஊடகத்தால் பெரிதாக்கப்படுவதாலேயே அரசியல் களத்தில் அவர்களுக்கான இடம் எளிதாக்கப்படுகிறது” என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மக்களுக்காக எப்பவதும் இவர் ரோட்டில் நின்னு போராடியிருகாரா? என்று கேள்வி எழுப்பி டுவிட்டர் பதிவிட்டுள்ளார் உதயகுமார்.
அரசியலுக்கு வர ஏதேனும் தேர்வு இருக்கிறதா சொல்லுங்கள்.. எவரும் வரலாம் திறமையும் தைரியமும் தமக்கு தேவையே தவிர அவர் எந்த துறை என்பது தேவை இல்லாதது என்று மதன் குமார் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
வெங்கடேஷ் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திரைத்துறையை சார்ந்தவர்களால் மக்களின் பார்வையை தங்களின் ஆதரவாக மாற்ற மிக மிக அதிகமாக நடிக்க வேண்டும்” என்கிறார்.
விஜேயந்திரன் தங்கராஜ் என்ற நேயர் பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “இங்கு நடிகர், தமிழர், கன்னடர் அதை தாண்டி தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் என்ற பார்வையில் நான் கமலை வரவேற்கிறேன். கமலை காட்டிலும் ரஜினியின் தமிழகக் குரல் மிக மிக குறைவு” என்கிறார்.
சீனிவாசன் என்பவர் தன்னுடைய டுவிட்டர் பதிவில், “தலைவர்,ஆட்சி,கட்சி,அரசியல் இவைகளின் அர்த்தங்களும், தேவைகளும்,பொறுப்புகளும் சரியாக புரிந்தவர்கள் இவைகளில் இல்லை. இவைகளில் உள்ள ஆதாயம் தெரிந்தவர் பலர் இதன் விளையாட்டு வீரர்கள். எப்போதாவது புதுமை விதை இதில் முளைக்கும். அதன் அறுவடை நம் கையில்” என்று தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
முரளி தேவி என்ற நேயரோ, “எல்லாரையும் நம்புவதற்கு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது, முட்டாள்கள் ஆக்கப்பட்டவர்கள்” என்று ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்